பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை



திறந்து விடுகிறது. “அகல்யா, அகல்யா! நான் உன்னுடைய மனதைப் புண்படுத்தி விட்டேனா என்ன ? சொல்லு, அகல்யா சொல்லு”, என்று அவன் குழைகிறான். இந்நிலை சலனத்தின் விளைவா? அன்புப் பண்பின் பணியா ?

தடம்புரண்டவள் அகல்யா. ஆனாலும், அவள் இதயத்தை அடியோடு இழந்து விடவில்லை. ஆம்: அன்று நீங்கள் தான் என்னைக் காதலித்துக் கொல்வதாகச் சொன்னீர்கள். ஆனால் இன்றோ, நான் உங்களைக் காதலித்துக் கொன்று விட்டேன்!” என்று அவள் தன்னுள் சொல்லிக் கொள்ளும்போது, அவள் என் இதயத்தைத் தொட்டுவிட்டாள்.

ஆனால்...? -

“ஐயோ! ஆண்களுக்கு ஒரு நீதி. பெண்களுக்கு இன்னொரு நீதியா ? இந்த அக்கிரமத்துக்கு இன்னும் என்னைப் போல எத்தனை பெண்கள் பலியாகவேண்டும்? உங்களுடைய இதயத்தில் ஈரம் இல்லையா ? அந்த ஈர மற்ற இதயத்தை எங்களுடைய கண்ணீராவது நனைக்க இல்லையா ? சீர்திருத்தம், சீர்திருத்தம் என்று வாய் ஓயாமல் அடித்துக் கொள்ளும் இளைஞர் உலகம் இந்த கொடுமையை இன்னும் எத்தனை நாட்களுக்குச் சகித்துக் கொண்டிருக்கப் போகிறது?...

உச்ச கட்டத்தில் பகுத்தறிவுப் பாணியில் அவள் பேசும் செயற்கைத் தன்மையுடைய இந்த வசனம், அவள் ‘நெஞ்சறிந்து ஏற்றுக்கொண்ட பழி'யைத் துடைக்க வல்லதா ? ஊஹூம்!

‘கெட்டவளுக்கு’ அடைக்கலம் கொடுப்பதன் மூலமே ஒருவன் ‘நல்லவன்’ ஆகிறான். இது அண்ணலின் கருத்து. இந்நிலையிலே கனகவிங்கத்தை நீங்கள் ஏன்அதற்குள் சாகடித்தீர்கள் ? நுண்ணிய கட்டிலம் அமைத்து எண்ணிப் பார்க்குங்கால்,கனகலிங்கம் ஒரு மின்னலெனவே தோன்றி மறைகிறான். இறந்தும் உயிர்வாழும் பரத்திரப் படைப்