பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 67



பாகவே கனகலிங்கத்தை நீங்கள் இவ்வாறு ஆக்கியிருக்கிறீர்கள். நல்லவர்கள் வாழ்வதில்லை- நானிலத்தின் தீர்ப்பு என்ற வாசகத்தை மெய்யாக்க வேண்டியே நீங்கள் இவ்விருவருக்கும் விண்ணுலக யாத்திரைக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும்! அதனால் தான், முடிவுகூட முன்னைய இலக்கிய மரபை ஒட்டிப் பழைமைப் பாணியிலேயே அமைந்து ‘சப்’பென்று போய் விட்டது ! உங்கள் கொள்கைகளுக்கு உகந்த ரீதியில் பாத்திரங்களை உருவாக்கி, அவர்கள் வாய் வழியே சமுதாயச் சிக்கல்களை அலசிப் பார்க்க முயன்ற நீங்கள், முடிவில் அகல்யாவின் இறந்த காலத்துக்கும் எதிர் காலத்துக்கும் ஊடாக, சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் வகையில் உங்கள் பணியை ஏற்று, அகல்யாவின் எஞ்சியவாழ்வைக் கனகலிங்கத்தின் அன்புக் கரங்களில் ஒப்படைத்திருக்கும் பட்சத்தில், இவ்விருவரது குணச்சித்திர அமைப்புக்களும் முழுமையடைந்திருக்கக் கூடும் ! நீதி தேவனின் மயக்கம் தெளிந்து, நீதியுள்ள சமுதாயச் சித்திரமும் உருவாகியிருக்கும் பெண்குலத்தை தூய்மைப் படுத்துவதற்காகவே நீங்கள் இதை எழுதியதாக வாதம் புரியும் உங்கள் பேச்சிலும் தர்க்க ரீதியான நியாயம் இருந்திருக்கும் ! அன்புப் புரட்சியின் உண்மைக் குரலையும், வீரம் செறிந்த காதல் தத்துவத்தின் மனக்கனவையும் நான் உணர்ந்து அனுபவிக்க முடிந்திருக்கும் ! சமுதாய நீதியையும் (Social justice), சமுதாயச் சீர்திருத்தத்தையும் {Social reform) வழங்கிய பெருமை உங்களை வந்தணைந்திருக்கும் வாழ்க்கைக்கு உரித்தான பொருளுக்கு ஒர் உரைகல்லாக அகல்யாவும் கனகலிங்கமும் அமைந்திருப்பதாக நீங்கள் திருப்திப்படுவீர்களானால், அகல்யாகனகலிங்கத்தின் கதை அரைகுறைக் கதைதான், ஆமாம், அரைகுறைக் கதையே தான். காரணம் இதுதான். அவர் களின் ‘கனவு’ நிறைவு பெறாமல் நிற்பதைப் போலவே, உங்களுடைய அருமையான கதையும் நிறைவு பெறாமல் நிற்கிறது.