பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 71



பார்வையோடு சீதாராமனைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்த நளினியைக் கண்ட மணமகனுக்கு அமைதியே இல்லை.

மணமான உடனே நளினியை இழுத்துக் கொண்டு தஞ்சாவூருக்கு வருகிறான் சீதாராமன். இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பயணம், அப்போதே! அவளை அவன் ஆசையோடு நெருங்கிய சமயம், அவள் பழைய குருசாமியை நினைவு படுத்தி நீ தான் திருடனா? என்று கேட்காமல் கேட்கிறாள். முதலிலே கசக்கிறது சீதாராமனுக்கு. பின், வழித் துணை கொண்டு தஞ்சையை அடைகின்றனர். அடைந்திட்ட புது மணக் கோலம் பூண்டு! -

தஞ்சை வந்த நேரம். அந்தி மாலை. “அந்தப் பழைய கதையையெல்லாம் நீயும் நானும் மறந்து விடுவதே நல்லது” என்கிறான் கதாநாயகன்!

“அதெப்படி சாத்தியம்?” என்கிறாள் நளினி. கடைத் தெருவுக்குப் போய் மீண்டதும் வெளிக் கதவு தாளிடாமலே சாத்தியிருந்தது. “நளினி!” என்று அழைக்கிறான் சீதாராமன். .

“எவ்வளவு சாமர்த்தியசாவிதான் ஆனாலும், ஒர் அயோக்கியனுடன் வாழ நான் விரும்பவில்லை . திடீரென்று ஏற்பட்ட முடிவு அல்ல இது. என்னைத் தேட வேண்டாம். நான் விஜயபுரம் போகவில்லை!” என்று கடிதம் எழுதி இருந்தாள் நளினி.

அழியாக் கனவு

விஜயபுரம் என்று ஒர் ஊர்; அங்கே ஓர் அக்கிரகாரம்; அங்கே பெண் ஒருத்தி, பெண் அல்ல. கன்னி. அவள் பெயர் நளினி. நளினமான பெயர்தான். அவளுக்குத்