பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை



செய்யாத நல்லவன் போல் போலீசாருடன் செல்கிறான் சீதாராமன், நளினியை விரும்பிய சீதாராமனும் சீதாராமனை மனத்தில் எண்ணிக் கலந்த நளினியும் சீதாராமனுக்காக வருந்திய அவன் அக்காளும் தபால் குமாஸ்தாவான நளினியின் தந்தை விஸ்வநாதய்யரும் குழம்பி நிற்கிறார்கள்.

பட்டினத்துப் பாங்கிலே இருபதினாயிரத்தைக் கொள்ளையடித்துச் சட்டத்தின் பிடியில் குருசாமி என்கிற எத்தனைப் பழிகாட்டி, சீதா ராமன் நல்லவானாகித் தப்புகிறான். ஆனால் இருபதினாயிரத்தில் பங்குக்காகத் தன்னருகிலேயே காத்திருந்த எத்தன் குருசாமியைச் சீதா ராமனால் உணர முடியவில்லையே !

விஜயபுரம் வருகிறான். தன் அக்காள் வீடு பூட்டியிருக்கிறது. எதிரே நளினி நிற்கக் கண்டு திகைக்கிறான். பின்பு நளினியிடம் பேசுகிறான். நளினியின் வீட்டில் அவனுக்கு இடம் கிடைக்கிறது. ஆனால் குருசாமி திண்ணைக்கு வந்து விட்டதை அவன் அறிந்தபோது, நளினியிடம் கூடச் சொல்லாமல் - பெட்டி கூட எடுத்துக் கொள்ளாமல் ஓடி விடுகிறான் ! நளினி நிலைக்கிறாள் மூன்று ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சீதாராமன் வருகிறான். நளினியை மணக்க விரும்புகிறான். நளினியின் தந்தை விஸ்வநாதய்யர் மகளிடம் உடன்பாடு கேட்கிறார். நளினியோ, “போ, அப்பா...!” என்கிறாள் நாணத்தின் மென்மையுடன். ‘திருமணத்துக்கு முன் சீதாராமன் அயோக்கியனா என்று தெரிந்து கொள்ளாவிடில் ஆயுசு பூராவும்.. ?’ என்று கலங்கினாள் நளினி. ஆனால், அதை அறிய வாய்ப்பே இல்லை ! திருமணம் நடக்கிறது. மருண்ட