பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 75



நளினிக்கு வாய்ப்பே கிடைக்க வில்லையாம் ! விந்தையாக இல்லையா !

இவர் சொல்ல நினைத்த இதே கதைக் கருவை அடிநாதமாக்கி, அற்புதம் பொருந்திய, உண்மையான, சிறப்புமிக்க நவீனத்தை என்னால் படைக்க முடியும் ! ‘நளினி'யின் தோல்வியினை அங்கீகரித்து, இந்தப் போட்டியை திரு. க.நா.சு. ஏற்பாரேயானால், தமிழ் இலக்கியம் பிழைத்துவிடும் என்று நாம் எண்ண வாய்ப்பு இருக்கிறது.

காந்திஜியும் க.கா.சு.வும்

தமிழ்ப் புதினத்தின் வளர்ச்சியில் ‘தேக்கம்’ கண்டிருப்பதாக ஏக்கம் கொண்டு ஏசி, அதற்கென ஒரு பத்து ஆண்டுகளையும், காணிக்கை வைத்துப் பேசியவர் க.நா.சு. என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். ஆனால், அவர் மட்டும் மறந்திருக்கத்தான் வேண்டும். அந்த ‘மறதி’க்கு வாழ்த்துக் கூற வேண்டும். காரணம் இல்லாமல் இல்லை. நவீனத்தின் ‘இருட்டுக் காலத்'தைப் பற்றிப் பேசவந்த இவர், தாம் படைத்த நளினியையும் மனத்தில் ஏந்தி வைத்துத்தான் அவ்வாறு பொதுமக்கள் முன்னிலையில், தம் முடிவுக் கருத்துரைகளை வைத்திருக்க வேண்டும். சாதாரணமாக நடைமுறையில் சொல்வது உண்டு- தம் பலம் தனக்குத் தெரியாதாம். ஆனால் இவருக்கோ, இவர் பலம் அப்பட்டமாகத் தெரியும் என்பது இவருடைய தனித்த கருத்து. அதனால் தான் இலக்கியப்பட்டம் வீசி விளையாடி வருகிறார். பட்டம் அடிக்கொரு முறை அறுந்து விழுகிறது. அல்ல, அறுத்துக் கொள்கிறது. ஏன், தெரியுமா ? அவருடைய ‘கை'யில் பலமில்லை. அப்படிப்பட்ட கையில் பேனாவைப் பிடிக்கலாமோ ? தம் தோல்வியை தமிழ்ப் புதின உலகின் தோல்வியாக ஆக்கி