பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை



ஆக:

இந்த உண்மை நிலை ஒன்றே போதும்- ‘காயத்ரி’யிலே ஒன்றுமே கிடையாது என்று நிரூபிப்பதற்கு !

ஒரு சுபயோக சுபதினத்திலேதான், குமாரி காயத்திரி திருமதி காயத்ரி ராஜரத்னம் ஆகியிருக்க வேண்டுமென்று நம்ப முடியவில்லை. காரணம் இதுதான். நாள் பார்த்து, நட்சத்திரம் கணித்து அவள் அவ்வாறு ஆவதற்கு, அவள் தன்னை ஆக்கிக் கொள்வதற்கு மனம் இணங்கித் தன்னுடைய தலையை அல்லது, கழுத்தை மூன்று முடிச்சுக்களைக் கட்டிக் கொள்வதற்கு ‘ரத்னா’ என்னும் படியான அந்த ராஜரத்னத்திடம் நீட்டியிருக்கும் பட்சத்தில். இப்படிப்பட்ட பட்சபாதச் செயல்களெல்லாம் அவள் வாழ்நாளில் நிகழ்ந்திருக்குமா ? என்ன?-சரசு (ஸு) கொடுத்த ஒரு புடவையைக் கட்டிக் கொள்ளக் கூட நாள் பார்த்ததோடு நிற்காமல், மேஷ ரிஷபமும் பார்க்க வில்லையா காயத்ரி ?

காயத்ரி!-பாவம்! ...

முந்தைப் பிறவியின் பாவ புண்ணியங்களின் ஐந்தொகை கணக்கிற்குப் பதில் சொல்ல வேண்டித்தான் இந்தப் பிறப்பில் அவரவர்கள் மனிதப் பிறவி எடுக்க நேருகிறது.

காயத்ரியைப் பொறுத்த அளவில், அளவற்ற பாவங்களைச் செய்தவள் அவள் என்பதை இடித்துக் காட்டுவதற்கு அவளுக்குக் கணவனாக வாய்த்திட்ட ரத்னாவே சாட்சி சொல்லுவான். அல்லவா ?

ரத்னா பெரிய ஆள் ; ஆகவேதான், அவனுடைய கதை பெரியதாகவே அமைகிறது. -

காயத்ரி சின்னப் பெண்'; எனவேதான் அவள் கதை சிறியதாகவே அமைக்கப்படுகிறது.