பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 83



நாலு பேர் சொல்வார்கள்.

இந்த நாலு பேர் சொல்லமாட்டார்கள்.

காயத்ரிக்கு ரங்கராஜன்தான் இரங்கவில்லை! சுஜாதாவாவது இரங்கியிருக்கலாம். அப்படி இரங்கியிருந்தால், பாவம், அவர் வயிறு காய்ந்து நடுவீதிக்கு அல்லவா இறங்கிவிட்டிருப்பார்! சுஜாதாவா கொக்கா ?

காயத்ரி...ப்பூ!

சுஜாதா எழுதினதாகச் சொல்லப்படும் காயத்ரி என்னும் கதை அல்லது தொடர் கதை, அல்லது தொடராத கதை பிற்பாடு தமிழில் பேசும் படமாக வெளிவந்ததாகவும் சொல்லப்பட்டது; பேசப்பட்டது! ஒர் ஆச்சரியம் என்ன தெரியுமா?-"அது வந்தது போலவே போய் விட்டது!-ஒர் ஆனந்தமாக சேதியாகவே இந்நடப்பு அமைந்தது. -

பங்களுரிலிருந்து 6-11-1977ம் நாளில் ‘காயத்ரி’க்கு வழங்கிய முன்னுரையில் காயத்ரியின் ஆசான் கூறுவதாவது... “இக்கதையிலே ஏதோ ஒரு நீதி இருக்கிறது என நினைக்கிறேன் !”

சுஜாதா குறிப்பிட்டிருந்த மாதிரி, ‘காயத்ரி’யில் ஏதோ ஒரு நீதி, அல்லது, எவ்வகையிலேனும் அமைந்திட்ட நீதி என்ற ஏதோ ஒன்று மருந்துக்காகிலும் ஒளிந்து மறைந்திருந்தால் கூட, நமது பெருமதிப்புக்குகந்த நமது தமிழ்ப் பெருங்குடி மக்கள் வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல் இப்படி அவசரம் அவசரமாக இந்தக் காயத்ரியை விரட்டி அடித்திருப்பார்களா, என்ன?