பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை



பிய்த்துக் கொண்டு வரும் இந்தச் சமுதாய எதிர்ச் சக்திகளின் நான்கு முனை அல்ல, நான்கு மூலைப் போராட்டத்திற்கு இடை நடுவிலே, எப்படியோ, ஏனோ, திருவாட்டி, ஊஹூம், திருவாளர் சுஜாதா இவர்கட்கு நடுவிலே முதலாவது இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டார் !

உண்மை இது.

மறுத்தால், பாவம்!—144...!

அதாவது, நமது சமூகத்தின் இளந் தலைமுறையினரை முறைதவறியும் முறையில்லாமலும் கெடுத்துக் கொண்டு வருவதில் சுஜாதாவுக்கு முதல் இடத்தைத் தர வேண்டுமென்பது என்னுடைய தீர்ப்பு !

விந்தைதான் !

என் தீர்ப்பா ?

இல்லை !

சுஜாதாவின் கதை என்ன ?

அதாகப் பட்டது, சுஜாதா படைத்த ‘காயத்ரி’யின் கதை விந்தையானது என்கிறேன்: சுஜாதா என்கிற பெண்களின் இயல்பான பெயருக்கேற்ப காயத்திரியை தயாரித்தவர் இயல்பிலேயே பெண்ணாக இருந்திருந்தால், காயத்ரி இப்படிச் சந்தி சிரித்திருக்க மாட்டாள்!-காயத்ரியைத் தயார் செய்த புள்ளி இயல்பிலேயே ஓர் ஆணாக இருந்த காரணம் கொண்டுதான், காயத்ரி இப்படி அவலமும் அலங்கோலமும் அடைந்திட நேர்ந்திருக்கிறது.

பெண்ணுக்குப் பேய் கூட இரங்கும் !