பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




4. காயத்ரி





சுஜாதா :



சமுகப் புல்லுருவிகள் 4 :

ழுத்துச் சமூகத்தின் புல்லுருவிகளாக, கொடியில் கட்டிய கொடிகளைப் போலே ஆலாய்ப் பறந்து கொண்டிருக்கின்ற சுஜாதா, புஷ்பா தங்க(த்)துரை. சிவசங்கரி, இந்துமதி ஆகிய அந்த நாலு பேர்களுக்கும் இடை நடுவிலே, இட ஒதுக்கீட்டுச் சிக்கல்கள் வெகு நாட்களுக்கு முன்னதாகவே சூடுபிடித்து விட்டன; ஆனாலும், நாளது தேதிவரையிலுங் கூட, அச்சிக்கல்கள் சிக்கறுக்கப்பட்டதாகச் சேதி கிடையாது. ஏன் தெரியுமோ? அந்த நாலு பேர்வழிகள் பற்றிய குறுக்கு வழிப் பரபரப்பு இலக்கியச் சந்தையில் ஒடுங்கவும் அடங்கவும் ஆரம்பித்து வெகுநாட்கள் ஆகிவிட்டன!

ஆனாலும் :

நாட்டையும் வீட்டையும் சீரழித்துப் பாழ்படுத்துவதில் ‘நான் முந்தி, நீ முந்தி’யென்று ஒருவருக்கு ஒருவராகவும், ஒருத்திக்கு ஒருத்தியாகவும் போட்டி போட்டுக் கொண்டு, கிராப்பையும் கூந்தலையும் மாறி மாறி, அல்லது, மாற்றி மாற்றிக் கழிந்த சில ஆண்டுகளாகவே