பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை



ஒரு நாள் க.நா.சு !

‘நளினி’ என் அனுதாபத்திற்கு இலக்காகும் ஒர் அபலைப் பெண். அவளுடைய பேதை மனத்தின் நுணுக்கமான மனத்தவத்தை- அந்த உயிர்த் தவத்துக்கு அடித்தளமாய் அமைந்திருந்த அவளுடைய களங்கமில்லாப் பாவனைகளை நுழைபுல நுண்மாண் அறிவுடன் மரபறிந்து, மாயை புரிந்து, எடுத்துச் சொல்வதற்கு ‘தகுந்த உள்ளம்’ அவளுக்குக் கிடைக்கவில்லை !

பட்டம் :

‘ஒரு நாள்’ என்னும் அற்புதமான நவீனத்தை எழுதிய ‘அந்த ஒரு நாள் க.நா.சு’. அவர்களை இனி தமிழ் எழுத்துலகம் தரிசிக்க வாய்ப்பில்லையோ, என்னவோ ?

பெருங்காயம் வைத்த வெறும் பாண்டம்- க.நா. சுப்பிரமணியம்... ! உள்ளே பண்டம் இல்லை ! ‘கமகம’ என்ற மணம் ஏமாற்றத்தையே தருகிறது !