பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 79



தாக்கரேயை (Thackeray) கதை உறுப்பினர்கள் ஆண்டனராம். ஆனால், நம் க.நா.சு.வோ நளினியை ஆள்கிறார். ஸ்காட் (Scott) கொண்டிருந்த கொள்கைக்கு எதிரானவர் இவர். கதையில் வருகின்ற ஏழெட்டு நிகழ்ச்சிகள் காரண காரியமின்றி நுழைக்கப் பட்டிருக்கின்றன.

“இலக்கிய விமரிசகர் என்றால், தாமே இலக்கியம் படைத்துத் தோல்வியுற்றவர் அல்லர்!’- மேலை நாட்டுச் சிந்தனை இது. இக்குறிப்பு நினைவுக்கு வரும் நேரத்தில், எனக்கு ஒர் எண்ணம் எழுவது உண்டு, க.நா.சு இப்போது இலக்கிய விமரிசகராக அவதாரம் எடுத்திருப்பதும் நல்லதுதான். ஏனென்றால், இவருடைய இலக்கிய வெற்றி தோல்வியைப் பற்றிய முடிவைக் கூற வாய்ப்பு உண்டாகும் வேளையில், என் போன்றவர்களை நளினி காப்பாற்றுவாள் !

உதிரிக் கதைக் கூடாகத் (Loose Piot) தோற்றம் தருகின்ற நளினி திரு கா. நா. சு. வுக்கு மட்டுமல்ல, தமிழ்ப் புதின இலக்கியத்துக்கே ஒரு ‘கெட்ட சோதனை'! கடைசியில் காணப்பெறும் நளினியின் நாலு வரிக் கடிதத்தைத் தவிர, சுவைப்பதற்கோ, சிந்திப்பதற்கோ ‘தொண்ணுாற்றிரண்டு பக்க நாவலில் வேறு எதுவுமே இல்லை.

‘தம் சொந்தக் கஜக்கோலை’க் கொண்டு இலக்கிய நியதி'யைப் பற்றி உரையாடி முதல் ஐந்து தமிழ் நாவல்கள்’ என்ற ஒரு விமரிசனக் கட்டுரைத் தொடரை க.நா. சு எழுதினார். தி.ம. பொன்னுச்சாமி பிள்ளையின் “நிகழ்ச்சிக் கோவை’; பி. ஆர், ராஜமய்யரின் குணச் சித்திர விளக்கம் ; வேதநாயகம் பிள்ளையின் வேகம் கெடாத நடை : அ. மாதவய்யாவின் மகிழ்வூட்டும் கதை ; பண்டித நடேச சாஸ்திரியின் எழுத்துக் கவர்ச்சி நிதானம் ஆகிய இலக்கியப் பண்புகளைப் போற்றும் இவர், தம் எழுத்துக்களில் மேற்கண்டவற்றை அரைகுறையாகப் பற்றக்கூட முடியவில்லை !