பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

“சொன்னால், அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்  ?”

“என் கணவர் என்னை ஏமாற்றிய அதிர்ச்சியையே சமாளித்து விட்டேன்!”

கணேஷ் சொல்கிறார் “திரைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். உன் சந்தேகங்கள் எல்லாம் சரியே. நீயும் ரத்னாவும் தனியாகப் படுக்கையில் இருந்தபோது, ரத்னா விளக்கை அணைக்க மறுத்ததை ஒரு தடவை குறிப்பிட்டிருக்கிறாய். என்ன நடந்தது ; தெரியுமா ? திரைக்குப் பின்னாலிருந்து ஒரு சினி காமிரா சுழன்றிருக் கிறது. பாத்ரூமிலும் அதே கதை ; அப்புறம். அந்தப் பெண்ணுடன்...அப்புறம்...”

“மை காட் !”

அவள் மெளனம்,

அவள்-காயத்ரி. தன்னையும் அறியாமல், தன் மானம், தன்மானம் பறிக்கப்பட்ட பேரதிர்ச்சியை அபலைத்தனமான

காயத்ரியின் சார்பிலே எடுத்து இயம்ப ஒடோடி வரும் கதை ஆசிரியர், அப்படியென்றால், கதையைத் தயாரித் தவர் ஒரேயொரு சொல்லிலே மெளனம் என்று எடுத்து இயம்பி, மெளனப் பிள்ளையாராக ஆகி விட்டாரே ?பின், அபலைத்தனமான காயத்ரியின் மனக் குமுறலை, இதயப் புயலை, பறிபோன மானத்தின் ஊழிப் பிரளயத்தை யார் சொல்வார்களாம், பாவம் . .

ஐயோ, பாவமே, காயத்ரி !-இருந்திருந்து இந்தக் கதைத் தயாரிப்பாளரிடம்தானா-இந்த அபாயப் புள்ளி யிடம் தானா உன் கண்ணிர்க் கதையை அஞ்சல் செய்திட வேண்டும்?-அஞ்சேல், அபயம்’ என்பதாக மனித அபிமானத்துடன் ஆறுதல் சொல்லத்தக்க சிறு துரும்பு மனிதர் ஒருவர் கூடவா, உன் கண்ணிர்க் கரையில்