பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

கிடப்பதாகத் திருவாய் மலர்ந்திருப்பதற்கான காரண காரியம் இந்த ரங்கராஜனுக்கும், அந்தப் பள்ளிகொண்டா னுக்கும்தான் வெளிச்சம்... ! . -

இராமகாதையில் விதியின் நாயகியாம் சீதாப்பிராட் டிக்கே விதியாக அமைந்தது இலட்சுமணன் கோடு 1-அது போலவே, நமது அன்றாட நடைமுறை வாழ்வில் இலட்சுமணன் கோடாக அமைவதுதான் ஒழுக்கம் எனும் விதிமுறை விழுப்பம் தருவதாலேதான் ஒழு க் கம் உயிரினும் ஒம்பப்படுகிறது. வள்ளுவம் வரையறுக்கும் ஒழுக்கத்தினாலே தான் பண்பு பண்பாடும் ; மரபு கீதங்கையொலி எழுப்பும்; குணநலன் சரித்திரம் படிக்கும்! -அப்போதுதான், மனிதன் உயர, சமூகமும் உயரும் ; சமூகம் நல்லபடியாக உயர்ந்திட சமூக மனிதனும் மனிதனாக உயர்ந்திடுவான் மானுட வாழ்க்கையின் இலட்சியங்கள் இலட்சுமணன் கோடுகளாகப் பொலிந்து தழைத்துச் செழித்துச் சிரிக்கையிலேதான், மண் வாழ்க்கை யின் உயிர்க்களை பொலிந்த கதை மாந்தர்களும் சிரிக்க முடியும் : சிறக்க இயலும் ; நிறக்கவும் கூடும்.!

வாழ்க்கை இலக்கியத்தின்-இலக்கிய வாழ்க்கையின் மேற்கண்ட விதிமுறைகளுக்கும் முறைவிதிகளுக்கும் எவ் வகையிலும் காயத்ரி’ ஈடுகொடுக்கவே இல்லை ! .

பேராசிரியர் கல்கி என்று சொன்னால், உடனே ஆயனர் மகள் சிவகாமி நம் மனக்கண்ணில் ஆனந்த நடமாடுவாள் ! - -

தகழி எனறால், கருத்தம்மா கள்ளங்கவடு இல்லாமல் வெள்ளைப் புன்னகையினை அள்ளி அள்ளி வீசுவாள்.

டால்ஸ்டாய்க்கு அன்னா கரினா வாய்க்கவில்லையா ?

நோபல் பரிசுக் கலைஞர் தாகூரின் புகழை நாளும் பொழுதும் பாடுவதற்குக் கோரா கிடைக்கவில்லையா ? .