பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை. எஸ். ஆறுமுகம்Δ 89

கனெல்லோரும் ஏதோ தன்னைப் பார்த்துத்தான் துப்பை அறியும் கதைகளை எழுதுவதாக மனத்தில் அசிங்கமான கற்பனையைப் பின்னிப் பிதற்றும் நம்மவர்களிலே சுஜாதாவும் ஒருவராக இருப்பதில் ஆச்சரியம் கிடையாது. -ஆனால், மேலே கண்ட மேலை நாட்டுக்காரர்களை யெல்லாம் பார்த்துத்தான், தனக்கு இப்படிப்பட்ட கதைகளையே எழுத வேண்டுமென்று ஒரு நப்பாசை தோன்றி, அதன் காரணமாகவே, மேலே சொல்லப்பட்ட ஆசிரியர்களையெல்லாம் கூட்டிக் குழப்பி இப்போது கதையைப் பின்னி, முரண்பட்ட காதலை முரண்பட்டுச் சொல்லி, இளைய பாரதத்தின் புதிய தலைமுறையினரைக் கெடுத்துக் குட்டிச்சுவராக ஆக்கும்படியான இப்படிப் பட்ட ஒரு வசதி வாய்ப்பு வாசகர்களின் புண்ணியத்தில் குருட்டு அதிர்ஷ்டமாகத் தனக்கும் தன் கும்பலுக்கும் கிட்டியிருக்கிறதென்கிற பரமரகசியத்தைத் தமிழ்ச் சமூகத் தினர் இப்போது துப்புக் கண்டு அறிந்து உணர ஆரம்பித்து விட்டார்கள் !- ஆனால், இந்த ரகசியம் இவர்களின் மண்டைகளில் கூட, இன்னமும் உறைக்க வில்லையே...? -

‘மணியன்’ ஆசிரியரான மணியன் முன்னம் குறிப்பிட் டிருந்தாற் போன்று, சுஜாதா எழுதிய நைலான் கயிறு’ என்கிற குமுதமான முதல் நாவல் அவருடைய எழுத்துலக வாழ்க்கைக்குச் சிறப்பான ஆரம்பமாக அமைந்திருக் கலாம் !-ஆனால், அந்த ஆரம்பம் அறிமுகம் செய்த சுஜாதா, அதே துப்பறியும் மர்மத் துறையில், அதே மேலைநாட்டின் அடிச்சுவடுகளை ஒற்றியேதான் இன்னமும் மலையாள அவியலாகக் கதை பண்ணி வருகிறார் !-ஆகவேதான், அவரது எழுத்துப் பிழைப்பு, அவருக்கு விஸ்தாரமாகப் படி அளிப்பதோடு நின்று விட்டது.; ஆகவேதான், அவருடைய எழுத்துக்கள் சமூகப் பிரச்சினையோடு கூட சமூகப் பொறுப்பு எதையும் ஏந்தி நிற்பதாகவும் அமைந்திடக் காணோம் : இந்நிலையிலே, தனது காயத்ரி'யில் பிரமாதமாகச் சமூக நீதி மறைந்து