பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88Δஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை

என்கிற பெயரிலேயே போதையும் போதகமும் பெற்று மயங்கிப் போவதற்கு காரண பூதமான ரத்னா, “காயத்ரி! Why do you imagine thing ? GLIT 6T 5–6 neu 3 ggr பாத்ரூமில் எட்டிப் பார்க்கிறாள் என்றாய். இந்தத் தடவை வரம்புமீறி என்ன என்னவோ சொல்கிறாய். சரசுவைக் கண்டால். உனக்குப் பிடிக்கவில்லையா ? அவளை ஏன் இவ்வளவு வெறுக்கிறாய்?” என்று அக்கு வேறு ஆணி வேறாக உன்னைக் கேள்விக் கணை தொடுத்துப் பிய்த்தெடுத்தானே, அப்போதாகிலும், உனக்கிருந்த கற்பனை வளத்தைப் பயன்படுத்திக் கொண்டு, சரசு என்கிற சரஸ்வதியை ‘இனம் கண்டு அவளைப் பாதாதிகேசம் வரைப் பிய்த்துத்தான் உதறினாயா ? ஊகூம் ?- அதுவும் இல்லை ! சரி, போகட்டும் முன்னமேயே, பயங்கரமான அந்த வீட்டின் பயங்கரமான சூழல் உன்னுள் ஐயத்தை எழுப்பி, உன்னை உறுத்தத் தொடங்கிவிட்டது அல்லைவா ? இந்நிலையிலே, உன் ரத்னா இரவிலே உன்னோடு தனித்து இருக்கையில், அதாவது, “ராசலீலை'யில் நீயும் அவனும் நான்கு சுவர் களுக்குள்ளே, அடைக்கப்பட்ட கதவுகளுக்கு இடையில், இடையீடின்றி, ஈருடலும் ஒருயிருமாகச் சரச சல்ல பத் தில் மயங்கியும் மயங்கியும் தனியாக, ஒன்றில் ஒன்றான தனிமையில் இருக்கையில், விளக்கை அணைக்க வேண்டாமென்று உன் ரத்னா சொன்னதுமே, உனக்கு அவன் பேச்சில் ஏதோ சூட்சுமம் பதுங்கியிருக்கிறதென்ற உண்மையை-உண்மை நிலையை உன்னுடைய உள் ளுணர்வின் வாயிலாக நீ உய்த்துணர்ந்து, அதற்கேற்பக் காரியத்தில் செயலாற்றியிருக்க வேண்டாமா ? சிந்தித்துப் பார், இல்லையெனில், திரும்பிப் பார் ! ... -

மேற்குக் காற்றிலே :

இர்விங் வாலெஸ் (Irwing Wallace) டெனிஸ்ராபின்ஸ்

அகதா க்ரிஸ்டி. பீட்டர் சீட்னே என்று நூற்றுக்கணக்கில்

பிரபலமடைந்துள்ள அந்நியநாட்டு மர்மக்கதாசிரியர்