பக்கம்:ஜெயரங்கன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@ ஜெயரங்கன்

வெளிச் செல்லவேபில்லை. காாக்கிரஹத்தில் தான் கைதியாயிருக் கிருள்.

கோவிந்தன்:-ஆனல் டெப்டி மாஜிஸ்டிரேட்டிடம் சென்றது. யார்? அவளை யார் அனுப்பினர்கள்?

ஸ்ரீனிவாசலு ராஜு-அதுவும் எனக்குத் தெரியாது. டெப்டி மாஜிஸ்டிரேட்டவர்கள் அவ்விஷயங்களை யெல்லாம் சொன்னபோது நான் அதிக ஆச்சரியங் கொண்டேன்.

கோவிந்தன்:-டெப்டி மாஜிஸ்டிரேட்டவர்கள் இல்லாததை உண்மைபோல் கற்பனை செய்தார்களா? என்ன?

ஸ்ரீனிவாசலு ராஜு-ஒருக்காலும் செய்திருக்கமாட்டார்கள். ஹரிச்சந்திானுக்கப்பால் அவரைத்தான் நான் சத்தியவானுகக் கருதுகிறேன். -

கோவிந்தன்-பின் அவைகள் எவ்வாறு நடந்திருக்கக் கூடும்:

ஸ்ரீனிவாசலு ராஜு-எனக்குக் தெரியாது. எனக்கே அது ஆச்சரியமாய்த்தானிருக்கிறது.

கோவிந்தன்:-நான் இப்போது காசி செல்லத்தைப் பார்க்க லாமோ?

ஸ்ரீனிவாசலு ராஜு-காண்பிப்பதில் ஆட்சேபனை பில்லை. ஆளுல் நிபந்தனையண்டு. - -

கோவிந்தன்:-எனக்குக் கூடவா?

ஸ்ரீனிவாசலு ராஜு:-ஆம், உங்களுக்குக் கூடக் கான், ஏனெ னில் நாங்கள் சொன்ன சொல்லுக்குப் பங்கம் வராமல் பாதுகாக்கப் பிரயாசைப் படுபவர்கள். தாங்களோ இக்காலத்துப் பரோபகார சிந்தையுடையவர்கள். அவளைப் பார்த்ததும் அவளே விடுவிக்கும் படி- தங்களை அவள் கேட்டுக் கொண்டால் தாங்கள் மனமிர ங்கி அவ் வாறு செய்யும்படி என்னேக் கேட்டுக் கொள்வீர்கள். நான் அதற்கு ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன்.

கோவிந்தன்:-ஆகையால் அவளை விடுவிக்கும்படி கேட்கக் கூடாதென்பது முதல் கிபத்தனே போலும்.

ஸ்ரீனிவாசலு ராஜு:-ஆம். . . .

கோவிந்தன்-இ.தொன்றுதான; வேறு கிபந்தனைகளும் உண் டோ? -

ஸ்ரீனிவாசலு ராஜ-இன்னெரு கிபந்தனையுமுண்டு. தங்கள் கைகளையும் கண்களையும் கட்டி விட்டு அழைத்துப் போவேன். அதற்கும் சம்மதிக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/101&oldid=632957" இலிருந்து மீள்விக்கப்பட்டது