பக்கம்:ஜெயரங்கன்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்பரின் பவிஷால் 171

வைத்த பிரேதம் எவ்வாறு மாயமாய்ப் போயிருக்கக்கூடும் என்றும் கோபுவை விசாரித்தால் ஏதாவது துப்புத்துலங்கக் கூடுமெனவும் கோவிந்தன் சொன்னபடி விசாரித்ததில் துப்புத்துலங்கியதுபோல் துலங்கி முன்னேயைவிட அதிகமான சந்தேகத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டதேயெனவும் கோவிக்கன் சொன்ன பிரகாமே இனி பூர்னிவாசலு ராஜுவின் பிரேதம் அகப்படுவது கஷ்டமெனவும் தனக்குள் தீர்மானித்துக் கொண்டு தன் இதர வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ரீமான் ரீனிவாசலு ராஜூ அவர்கள் அறையில் வைக்கப்பட்டிருந்த கணக்குப் புஸ்தகங்களை டெப்டி - மாஜிஸ்டிரேட்கட்டில்ேவைத்து பங்கோபஸ்தாய் வைத்திருப்பதாகக் சொன்னால்லவா? சென்னையிலிருந்து கணக்குகளைப் பரிசோதிக் கும் கி.புணர் ஒருவரை வரவழைத்து அவைகளைச் சோதிக்கச் செய்ததில் பல பொய்க்கணக்குகள் எழுதப்பட்டு மோசம்செய்திருப் பதாகத் தெரிந்தது. அவைகளைப்பற்றி காந்திமதியா பிள்ளையைக் கேட்டதற்கு வரவு வந்த தொகைகளை யெல்லாம் அப்போதைக் கப்போது நீமான் நீனிவாசலு ராஜ காரிடம் தான் கொடுப்பது வழக்கமென்றம், தான் செம்பாலடிக்க காசுகூட வைத்துக்கொள் வதில்லை யென்றும் அவர்கள் சொன்னபடி கணக்குகள் எழுது வதே தன் வேலை யென்றும் தனக்குத் தெரிக்க வரையில் மூன்று தலை முறைகளா ய்த் தன் முன்னேர்களும் தாலும் கணக்கு வேலை பார்த்து வருவதாகவும் அதற்கு முன் எத்தனே தலை முறைகளா கவோ தங்கள் முன்னேர்கள் அவ்விடத்திலேயே நம்பிக்கையாய் டிை வேலை செய்து வருவதாகவும் தெரிவித்தார். புஸ்தகத்தில் பல பக்கங்களில் ரீமான் நீனிவாசலு ராஜுகாரு கையெழுத்து செப் திருப்பதாயும் நீனிவாசலு ராக அதிக புத்திகூர்மையுடைய வரென்றும் சரியான கணக்குகளாயில்லாவிட்டால் அவர் எவ்வாறு ஆங்காங்கு கையொப்ப மிட்டிருக்கக்கூடுமென்றும் கேட்டார். ஆயி லும் இன்னும் சில தினங்கள் வசையில் அவரை ரிமாண்டிலேயே வைத்திருக்கவேண்டுமென டெப்டிமாஜிஸ்டிரேட் உத்தரவிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயரங்கன்.pdf/176&oldid=633038" இலிருந்து மீள்விக்கப்பட்டது