உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயில்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெயில் ஞாபகத்திற்கு வந்து மூளையைக் கலக்கிவிடுகிறது. மேற் கூறிய மாஜி - அதிகாரிகளைப் போலவே நமக்கும் சீர் திருத்த ஆர்வம் உண்டு, அதுதாபமும் இருக்கிறது. எனினும், நாம் பார்க்கும் கொடுமைகளையும், கேட்கும் அநீதிகளையும் விரைவிலே மறந்துவிடுகிருேம். மேலும், நாம் எல்லோருமே பழக்கத்திற்கு அடிமைகள். துனிப் புல் மேய்வதுதான் நமக்கு எளிது. சலனம், அசைவு, மாறுதல் எதையும் கண்டால் பயமுண்டாகிறது. பிறகு, மறதி எல்லாவற்றையும் மறைத்துவிடுகிறது. நமக்கு எத்தனையோ அலுவல்கள். ஜெயிலைப்பற்றியும் அதற்குள் வாடும் சிறகொடிந்த பறவைகளைப்பற்றியும் நமக்கு என்ன ? லட்சக் கணக்கான கைதிகளின் ஒலம் நம் தாக்கத்தைக் கலைப்பதில்லை; கோடிட்ட அரைக் கைத் சட்டையும், குறைக் கால் சட்டையும், வானரக் குல்லாவும் அணிந்த மனித உருவங்களின் நிழல்கள்கூட நம் கண்களில் படுவதில்லை. ஏன்? வழக்கம், வழக்கம், தொன்று தொட்டு வந்த வழக்கங்தானே ! குற்றம் செய்வது ஒரு நோய். அந்நோய் உள்ளத்தில் சம்பந்தப்பட்டது. அதற்கு வைத்தியம் செய்ய ஏற்பட்ட மருத்துவசாலேதான் ஜெயில். பிணி யாளர் எவ்வளவு ஆதரவுடனும் அன்புடனும் நடத்தப் பட்டால் பிணிகள் நீங்குமோ, அது போலவே குற்ற வாளிகளும் கவனிக்கப்பட வேண்டும், தண்டனைகள் குற்றவாளிகளைச் சீர்திருத்துவனவாக இருக்கவேண்டும்; அவர்களையும் பொது ஜனங்களையும் பயமுறுத்துவனவாக இருந்து பயனில்லை என்பதை இதுவரை சரித்திரம் நிரூபித்து வருகிறது. 10-வருஷம் 20-வருஷம் என்றெல் ll ".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/17&oldid=855425" இலிருந்து மீள்விக்கப்பட்டது