பக்கம்:ஜெயில்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s கட்டுரைகள் சப்பாத்தி; கொஞ்சம் சோறு; வருஷம் முழுதும் துவரம் பருப்பும் ஒரே விதமான குழம்பும் கொடுப்பார்கள். ஜெயிலுக்குள் கைதிகளுக்குக் கொடுக்கப்படும் வேலைகள் மிகவும் கஷ்டமானவை. செக்கிழுத்தல், கயிறு முறுக்குதல், தச்சு, கொல் வேலைகள் முதலிய பல வேலைகளுண்டு. மாதந்தோறும் மூன்று, நான்கு லட்சம் தேங்காய்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகின்றது. அந்தத் தேங்கா யெண்ணெய் இந்தியாவுக்கும் பர்மா வுக்கும் அனுப்பப்பட்டு வந்தது. பெரிய போக்கிரிகளான கிரிமினல் கைதிகளே அங்கமானுக்கு அனுப்பப்படுகிருர்கள் என்று காரணம் வைத்துக்கொண்டு, ஜெயில் நிர்வாகம் முழுவதிலுமே கண்டிப்பும் கொடுமையும் கையாளப்படுகின்றன. ராஜீயக் கைதிகள் விஷயத்தில் கடைசியாகக் கொஞ்சம் மாறுதல் ஏற்பட்டிருந்தபோதிலும், முன்னல் அவர்கள் மிக வு ம் கேவலமாகவே நடத்தப்பட்டு வந்தார்கள். அவர்களுக்கும் மற்ற கிரிமினல்களுக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கைதான், ஒரே சட்டங்தான், ஒரே மாதிரி அமுல்தான். கொடுமைகளைத் தாங்க மாட்டாமல் அடிக்கடி கைதிகள் தற்கொலை செய்து கொள்வது வழக்கமா யிருந்தது. இந்தியச் சிறைகளைப் பார்க்கினும் தற்கொலை அங்கு மிகவும் அதிகம். உணவு அளவில் போதாது, ருசியிலும் மட்டம். வேலையோ பளுவானதா யிருக்கும். கைதிகளே மேலதிகாரிகளாய் நியமிக்கப்படுவதால், மிருகத்தனமான கொடுமையைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? கல்வி யறிவும், சிந்தன சக்தியும் பெற்ற ராஜீயக் கைதிகள் இழிவாக 34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/39&oldid=855473" இலிருந்து மீள்விக்கப்பட்டது