இந்தியத் தொழிலாளர் ளுடைய சம்பளங்கள், அவர்கள் கைக்கு வராமலும், கண்ணுக்குப் படாமலுமே, கங்காணிகளிடம் வாங்கிய கடன்களுக்குப் போய்விடும். இப்பொழுது அடிக்கடி தொழிலாளர் காசுகளை நேரிலேயே வாங்குகின்றனர்; கங்காணிகள் பட்டுவாடா செய்வதில்லை. ஆனால், தொழி லாளர் வீடுகளுக்குத் திரும்பும் பாதையில் கங்காணிகள் கின்றுகொண்டு தம் கணக்குக்கு உரியதை வாங்கிக் கொள்ளுகிருர்கள். ஆளையும் காசையும் கண்ட பிறகு விடுவார்களா ? தொழிலாளர்தான், கொடுக்கமுடியாது!’ என்று தட்ட முடியுமா? மேலும், வாங்கிய கடனக் கொடுக்காமல் இருக்க என்ன நியாயம்? இலங்கையில் நான் சந்தித்த பிரபலமான பெரிய கங்காணிமார்களில் ஒரு வ ரா கிய பூரீ. ரங்கசாமிக் கங்காணியாரிடம் கேட்டதில், பல வருஷங்களாய் சம் தொழிலாளர் இருந்த கிலேமைகளைப்பற்றி உருக்கமாகக் கதை கதையாகச் சொன்னர். அவருக்கு 32-வருஷம் இலங்கைத் தோட்டங்களில் அநுபவம். அவருடைய தந்தையார் இலங்கைத் தோட்டத்தில் 23 - வருஷம் கூலியாக வேலை செய்தவர். அந்த 23 - வருஷம் உழைத்த பின் இந்தியாவுக்கு அவர் திரும்பும் பொழுது அவருக்கு ரூபாய் 150 கடன் இருந்ததாம். இதில் முன் கடன் ரூபாய் 120; வழிச் செலவுக்கு வாங் கி ய கடன் ரூபாய் 30; ஆக ரூபாய் 150. இலங்கைத் தோட்டங்களில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பி வருகிறவர்களைப் பார்த்தால், ஏதோ அங்கு செழிப்பாகவே வாழ்ந்து வந்திருப்பார்கள் என்று 49
பக்கம்:ஜெயில்.pdf/54
Appearance