பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1jo

o

சங்கர் வேகமாக நடந்து வந்துகொண்டிருந்தான். அவனது இடையில் அந்தப் புதிய பொருள் உறுத்திக் கொண்டிருந்தது- உள்ளத்தில் புதிய கவலை உறுத்திக் கொண்டிருப்பதைப்போல.

மரங்கள் அடர்ந்த பகுதியின் வழியாக அவன் வந்துகொண்டிருந்தான். அப்போது யா .ே எ தன்னைப் பின்தொடர்ந்து வருவதேபோல் தோன்ற வுமே சங்கர் சட்டென்று திரும்பிப் பார்க்க எண்ணி னான். ஒரு வேளை, ஏதேனும் பேய் பிசாசுகள்தான் இந்த அகால வேளையில் நடமாடுகின் றனவோ என்கிற ஒரு கிலியும் கூடவே அவன் மனத் தில் எழுந்தது. இந்த எண்ணம் தோன்றிய பிறகு- பின் புறமென்ன; அக்கம் பக்கம் பார்க்கவே அவனுக்குச் சிறிது அச்சமாக இருந்தது.

ஆயினும் அவனால் அப்படிக் கண்மூடித்தனமாக நடந்து கொண்டேயிருக்க இயலவில்லை. பேய், பிசாசுகளைப் பற்றிய கதைகளைத் தானே படித்தும்; பலர் சொல்லியும் அவன் கேள்விப் பட்டிருக்கிறான். பேயின் உருவங்களைப் பற்றியும்; அவைகளின் செய் கைகளைப் பற்றியும் பலவிதமான கதைகளை அவன் அறிந்திருந்தான். இப்போது அது உண்மையில் எப்படித்தான் இருக்குமென்பதைப் பார் த் து விட்டால் என்ன?’ என்கிற ஓர் எண்ணம் எழுந்தது.

தன்னுடைய தைரியத்தையெல்லாம் ஒன்று திரட்டி மெல்லத் திரும்பிப் பார் க்கப் போனான்.

ஆனால் அதற்குள் எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஒரு முரட்டுக் கரம் அவன் வாயைப் பொத்தியது.