பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T (15

சங்கரால் கத்த முடியாமற் போனது ஆச்சரியமல்ல; அந்த முரட்டுக்கரம் வாயோடு மூக்கையும் சேர்த் துப் பிடித்துக்தொண்டு விட்டதால், நிமிஷ நேரத் துக்குள் மூச்சுவிடக்கூட முடியாமற் போய், திக்கு முக்காடினான். சங்கர் தன்னுடைய பலம் முழுவதை யும் உபயோகித்து, தன்னைப்பற்றி வளைத்த உருவத்தை ஒர் உதறு உதறி மீண்டான். ஆனால் அதற்குள் கையில் ஒரு துணி மூட்டையுடன் எதிர்ப்பட்ட அந்த உருவம் மளகர் என்று சங்கரின் முகத்தில் ஓங்கி ஒர் குத்துவிட்டது.

து.ாக்கி எறியப்பட்டவனைப் போல் எட்டப் போய் விழுந்த சங்கர் நிமிஷ நேரம் துடிதுடித்துப் போனான். வலியின் அதிர்வு ஒரு புறம்-ஒரு குற்றமும் செய்யாமல் சாலை வழியே சென்று கொண்டிருக்கும் தன்னைத் தாக்கிய கயவர்கள் மீது எழுந்த ஆத்திரம் ஒரு புறம்-இரண்டு வாகச் சேர்ந்து அவனை வெறிகொள்ளச் செய்திருந்தன.

தரையில் விழுந்த சங்கர் எழுந்து நிற்பதற்குள், அந்த இரு முரடர்களும் மீண்டும் சங்கரைத் தாக்கப் பாய்ந்து வரவே, சங்கர் சட்டென்று இடையிலிருந்த ரிவால்வரைக் கையில் காடுத்துக் கொண்டான். மறுகணம்

டுமீல்’ என்று ஓர் ஒசை-மூட்டைக்காரன் இடக்கையைக் குண்டு துஎைல்தது. கையிலிருந்த மூட்டை கீழே விழுந்தது. அவன் ஐயோ!

அம்மா’’ என்று அலறிக்கொண்டு ஓடினான்.