பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107

துப்பாக்கியைக் கண்டதும், அரண்டுபோன மற்ற வனும் உயிர் பிழைத்தால் போதுமென்று பின்னா லேயே ஒட்டம் பிடித்தான்.

மரத்துக்குப் பின்னாலிருந்து வெளியே வந்த சங்கர் அவர்கள் விட்டுச் சென்ற மூட்டையைக் கண்டதும் அப்படியே திடுக்கிட்டுப் போனான். தொப் பென்று கீழே விழுந்த வேகத்தில் மூட்டை பிரிந்து, சில நோட்டுக் கற்றைகள் வெளியே சிதறிக் கிடந்தன. உள்ளே-இன்னும் கற்றை கற்றையாகப் புத்தம் புதிய கான்ஸி நோட்டுக்கள்!

சங்கருக்குச் சில விநாடிவரை என்ன செய்வ தென்றே புரியவில்லை. ஆனால் இத்தனை பணத்தையும் விட்டுச் சென்றவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் அவர்கள் போதிய பலத்துடன் திரும்பி வந்து தன்னைத் தாக்கு முன்பு இங்கிருந்து ஓடிவிட வேண்டும்; அப்படி ஒடும்போது கூடவே இந்த மூட்டையையும் எடுத்துச் செல்ல வேண்டியது தான் புத்திசாலித்தனம்; பிறகு என்ன நேர்ந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டான்.

அவிழ்ந்து போன துணி மூட்டையை இறுகக் கட்டி இடக்கையில் எடுத்துக்கொண்டான். பாது காப்புக்காக வலக்கையில் துப்பாக்கியையும் பிடித் துக்கொண்டே வேகமாகப் பட்டாமணியம் வீட்டை நோக்கி நடந்தான்.