பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

நீ சொல்லிப்பிட்டியா? -சங்கர் ஆச்சரியத் துடன் கேட்டான்.

சொல்லாமெ? இல்லேன்னா என்னைக் கொன்னே போட்டிருப்பாங்களே. ரொம்ப நேரம் வரை இரும்யுப் பெட்டியை எதாலே எல்லாமோ திறந்து பார்க்கிற மாதிரியும்; அடிச்சு உடைக்கிற மாதிரியும் எல்லாம் ஓசை கேட்டுக்கிட்டே இருந் தது. நீ எங்கே போயிட்டே? ஒருவேளை இவங்க உன்னைப் பார்க்கவே இல்லியான்னும் தெரியல்லே. கொள்ளையடிக்கிறவங்களோ, சத்தம் போடக்கூட முடியாமெ, வாயிலே துணியை வெச்சு அடைச் சிட்டாங்க இன்னும் சித்தே நாழி நீ வரலேன்னா நான் செத்துக்கூடப் போயிருப்பேன். இதைக் கூறி முடிப்பதற்குள் வசந்திக்கு அழுகையே வந்து விட்டது.

சரி...சரி. அதுதான் நான் வந்துட்டேனே வா அப்பா ரூமைப் போய்ப் பார்க்கலாம்!” என்று வேகமாகப் புறப்பட்ட சங்கரைப் பின் தொடர்ந்து வசந்தியும் சென்றாள். o

அந்த அறைக்குள் அடி எடுத்து வைத்ததும் அங்கே அவர்கள் கண்ட காட்சி!

ஏதோ போர்ப் பிரதேசத்துக்குள் அடியெடுத்து வைத்தாற்போல் ஏககாலத்தில் இருவரும் நடுங் கியே போனார்கள்.

அவர்களைக் கண்டு பரிகசிப்பது போல் இரும் புப்பெட்டி தனது கோரப் பற்களை நீட்டிப் பயங்கர மாகச் சிரித்துக்கொண்டிருந்தது.