பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

குள்ளே ஓர் ஆள் கையை ஓங்கி என்னை அடிக்க வந்து விட்டான்."" ■

"அப்புறம்-?"

"உடனே மத்தவன், ஒருவேளை இது பொய் சொன்னாலும் சொல்லும். படிச்ச பொண்ணு பாத்தியா? என்றான். அட சரிதான், பிடிச்சு இழுத்துக்கிட்டுவாடா! சாவி இந்த வீட்டிலே இல்லேன்னாலும் விட்டுட்டா போயிடப்போறோம்? ன்னான். ரெண்டுபேரும் என்னைக் கரகர ன்னு இழுத்துக் கிட்டுப் போய்ச் சமையல் கட்டுத் துரனிலே கட்டிப் போட்டாங்க..”*

"சமையல் கிழவி?” i

அவளை முந்தியே கட்டி வெச்சிருந்தாங்க. '

அப்போ திருடவந்தவன் வாசல் பக்கத்தாலே வல்லியா?’ ’

'அதெப்படி வர முடியும் சங்கர்? வாசல் கதவை நாம் தாழ்ப்பாள் போட்டுட்டுத்தானே படுத்துக்கிட் டோம். கிழவிகட ஏதோ பயித்தியம் மாதிரி உளறினாளே...?? என்றாள் வசந்தி.

'கிழவி ஒண்ணும் உளறல்லே. அப்புறமா அதை நான் உனக்கு விவரமாகச் சொல்றேன். நீ மேலே என்ன நடந்தது சொல்லு’’ என்றான்.

ஒருத்தன் என்கிட்டே கத்தியைக் காட்டி, இரும்புப் பெட்டி, எந்த அறையிலே இருக்கு? சிக்கிரம் சொல்லு?ன்னு மிரட்டினான்.'