பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

காய்ச்சின பாலில் டீயைக் கொட்டி, அது கொதித்ததும் அப்படியே தண்ணிர் ஊற்றாமல் வடிகட்டி, சீனியைப் போட்டாள் கிழவி.

சைனா டீன்னா என்ன பாட்டி??? அந்த ஊரைப் பத்தியெல்லாம்கூட உனக்குத் தெரியுமா??? தெரியாமெ என்ன? அதுதானே இவங்களுக் குத் தாய்நாடு!?-சங்கர் ஆத்திரத்தை உமிழ்ந் தான்.

'போ சங்கர்! நம்ம பாட்டி இந்தியாவிலேயே பொறந்தவங்க, வேணும்னா கேட்டுப் பாரு..??

'நான் இவங்க உடம்பைப்பத்திப் பேசல்லே. இவங்க எண்ணம், செயல், அதைப்பத்திப் பேச றேன். உங்கப்பா கொடுக்கிற சம்பளத்தை நம்பியா கிழவியும் இவங்க கூட்டமும் இங்கே பிழைப்பு நடத்தறாங்க???

  • அப்படீன்னா???

'உனக்கு இதெல்லாம் ஒண்னும் புரியாது??

கொஞ்சம் புரியும்படிதான் சொல்லேன், சங்கர்! வசந்தி கெஞ்சினாள்.

'ஆ.பொல்லாத விஷயத்தைக் கண்டவன் இவன்! அவனைப் போய்க் கேளு. கண்ட சோமாரிப் பசங்களை எல்லாம் நம்பி, பொண்ணையும் வீட்டை யும் விட்டுட்டுப் போன உங்க அப்பனைச் சொல்ல ணும். வரட்டும், வெச்சிக்கிறேன். இந்தா, நீ குடி: