பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

புறப்பட்டுட்டியா சங்கர்?"

“எனக்கு ஒரே பயமாயிருக்கு, சங்கர்!”

பயப்படாதே. உன்னை யாரும் ஒண்னும் செய்ய மாட்டாங்க... சீக்கிரமே நாம் சந்திப்போம்.”

சங்கர் பதிலுக்குக்கூடக் காத்திராமல் விருட் டென்று வாசல் வழியாகப் பாய்ந்தான். இருட்டில் விடுவிடுவென்று ஸ்டேஷனை நோக்கி அவன் சென்ற திசையையே பார்த்தவண்ணம் வசந்தி வாசலில் நின்றுகொண்டிருந்தாள். உள்ளே கிழவி கதவைத் தட்டி உடைத்துக் கொண்டிருந்தாள்.

சற்றைக்கெல்லாம் அந்தச் சிறிய சந்தைப் பேட்டை ஸ்டேஷனில் நின்ற ஒரு பாசஞ்சர் வண்டி .கூ"வென்று ஒசை எழுப்பிய வண்ணம். தள்ளாடி நகர்ந்தது.

சங்கரையும்; அவனது கனமான தோல் பெட்டி யின் சுமையையும்; தாளாமல் தான்; தெற்கே செல்லும் அந்தப் பாசஞ்சர்வண்டி அப்படித் தள்ளாடித் தள்ளாடி ஊர்கிறதோ...!