பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 உள்ளபடியே வசந்திமிகவும் பயந்து போயிருந் தாள். சங்கர் இப்படி அவளைத் திடுதிப்பென்று தனியே விட்டு விட்டுப் போய்விடுவான் என்று அவள் எதிர்பார்க்கவே யில்லை. உரத்த குரலில் சங்கரை வாய்க்கு வந்தபடி யெல்லாம் திட்டினாள் கிழவி. உடனே வசந்தி, போட்டி, சங்கர் இப்போ இங்கே இல்லே, இந்த ஊரைவிட்டே போயிட்டான். வீணா ஏன் அவனைத் திட்டறே??’ என்றாள். “solo- பாவிப்பெண்ணே! காரியத்தைக் கெடுத் துப்பிட்டியே!’’ என்று கிழவி பதறிப்போய்த் தொண்டை கிழியக் கத்தினாள். வசந்தி, நாம் என்ன காரியத்தைக் கெடுத்து விட்டோம்? சங்கர் போனால் இவளுக்கு என்ன?” என்று ஒன்றும் புரியாமல் விழித்தாள். "உனக்கு ஒண்ணுமே புரியலையா? ஐயோ... ஐயோ! இந்தப் பட்டாமணியம் வயித்திலே ஏன் இப்படியொரு அசட்டுப் பொண்ணு பிறக்கணும்? அவருடைய சாமர்த்தியம் என்ன; கில்லாடித்தனம் என்ன? இப்போ பெத்த அப்பனுக்கே உலை வச்சிட்டியேடி பொண்ணே....??-கிழவி கண்ணிர் வடிப்பதுபோல் கூறினாள். “பாட்டி, நீ என்ன சொல்றேன்னே எனக்குப் புரியல்லே! ஒரே குழப்பமாக இருக்கு. எங்கப்பா வுக்கு நான் என்ன கெடுதல் பண்ணினேன்? சங்கர்