பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

போனான். சங்கரிடம் பாவாடை தோற்றது, சந்தானத்திடம் தாம் தோற்றதுபோல ஒருவித வெறியையே பட்டாமணியத்தின் உள்ளத்தில் தூண்டிவிட்டு விட்டது.

எதையோ நினைத்துக் கொண்டவர்போல், பாவாடையை அழைத்து ரகசியமாக, இன்று இரவு சரியாகப் பத்து மணிக்கு நம்ம வீட்டுக்கு வா!' என்று உத்தரவு பிறப்பித்தார். பாவாடையும், சரி? என்று தலையை அசைத்தான்.

இன்று இரவு ஏதோ விபரீதம் நிகழப்போகிறது; நாம் எப்படியாவது அதைத் தெரிந்துகொண்டு எவ் வித ஆபத்தும் நேராமல் தடுக்க வேண்டும்’ என்று வசந்தி உறங்காமலே பக்கத்து அறையில் ஒளிந்து காத்திருந்தாள்.

இரவு மணி பத்து

குறிப்பிட்டபடி பI பெTசி)ட வந்துவிட்டான். அவனைத் தம்முடைய அறைக்கு அழைத்துச் சென்ற பட்டாமணியம் தம் திட்டத்தை விளக்கினார். வஸ்தாது அதைக் கேட்டுவிட்டு மிகவும் உற்சாகத் துடன், அப்படியே செஞ்சு, பூண்டோடு அழிச்சுப் பிடறேனுங்க!?? என்று வாக்களித்தான். கேட்டுக் கொண்டிருந்த வசந்தியின் உள்ளத்தில், ஒரு பெரும் இடியே விழுந்துவிட்டாற் போலிருந்தது. இங்கே

வஸ்தாதை வண்டியில் ஏற்றிக் கொண்டு பட்டாமணியம் சென்ற பிறகு அங்கே ஓர் அசா தாரண அமைதி நிலவியது. ஆனால் அந்த அமைதி அதிக நேரம் நீடிக்கவில்லை.