பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சதியாலோசனை

_

தாயுமானவர் உயர்நிலைப் பள்ளி சமீபத்தில் தான் சந்தைப்பேட்டையில் உருவாயிற்று. இதை உருவாக்க முன் நின்றவர் தேசத் தொண்டரும், பழுத்த சிவபக்தருமான மிராசுதார் சந்தானம். அது பட்டாமணியத்துக்குப் பிடிக்கவில்லை.

அதனால், பல தனவந்தர்களை உதவி செய்ய வொட்டாமல் ரகசியமாகப் பட்டாமணியம் கலைத் தார். பிறகு அவராகவே வலுவில் சந்தானத்திடம் சென்று தம்முடைய பெயரைப் பள்ளிக்குச் சூட்டுவ தானால், நிதி திரட்ட ஏற்பாடு செய்வதாகக் கூறினார். இதையெல்லாம் கண்டு வெறுப்புற்ற சந்தானம், தம்முடைய சொத்துக்களில் ஒரு பகுதி யை விற்று, ஏகபோகமாக அவரே அந்தத் தருமப் பள்ளியைத் தாயுமானவர் பெயரில் கட்டி முடித்து விட்டார்.

அதுமட்டுமல்ல; அந்தப் பள்ளியில் படிக்கும் ஏழை, அநாதைக் குழந்தைகளுக்கு இலவச விடுதி யொன்றையும் கட்டி, உணவும் உடையும் கொடுக்க வும் வழி செய்தார்.

சந்தானத்தின் தரும இல்லத்தில் படிக்கும் சங்கரிடம்தான் பாவாடை இன்று தோற்றுப்