பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

வசந்தியும் வண்டிக்காரனும் மனத்துக்குள் ளேயே சிரித்துக்கொண்டார்கள்.

பட்டாமணியத்துக்கு ஒரு புறம் வருத்தமாகவும், மறுபுறம் ஆத்திரமாகவும் வந்தது. பாவாடை அவருடைய ஆள். அவனை அவர் கைக்குள் போட் டுக்கொண்டு, ஊரை மிரட்டி எத்தனையோ காரியங் களைச் செய்துவருபவர். சந்தைப்பேட்டையில் தமக்கு மிஞ்சி ஒரு பெரிய மனுஷன் இருக்கக்கூடாது என்று எண்ணினார். அதனால்தான் அவருக்கு அத்தனை வேகம் வந்தது.

அத்தனை கூட்டத்துக்கு மத்தியில் சந்தைப் பேட்டையில் தன் கண்ணெதிரே கண்ட காட்சி அவர் மனதை வெகுவாகப் பாதித்து விட்டது.

பாவாடைக்கு ஒரு போட்டியா?--

தன்னுடைய எதிர்காலத் திட்டங்கள் ஒரு கேள்விக்குறியாக எழும்பி நிற்பது போல் அவரை பயமுறுத்தின.