பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

சந்தானத்தின் தியானத்தைக் கலைத்ததோடு அவரைத் திடுக்கிடவும் வைத்துவிட்டன.

விழிகளைத் திறந்த அவர் எதிரில், கேன்ை யாள் சண்முகம் பணிவுடன் கைகட்டி நின்று கொண்டிருந்தான். எஜமானரது பார்வையிலே பிறந்த கேள்வியைப் புரிந்துகொண்டு சண்முகமே விஷயத்தை விளக்கினான்:

நேத்து ராத்திரி நம்ம பள்ளிக்கூடத்துப் பிள்ளைங்க யாரோ, பாவாடை வஸ்தாது வைக்கப் போரிலே தீ வைச்சுப்புட்டாங்களாம். அக்கரைச் சனங்களே திரண்டு வந்திருக்காங்க. வஸ்தாதுக்கு உங்களை உடனே பார்க்கணுமாம்.’’

சந்தானம் ஒரு கணம் அப்படியே செயலிழந்து நின்றுவிட்டார். கேள்விப்பட்ட செய்தியிலே அவருக்கு அதிர்ச்சி தரும் அம்சம் ஒன்று இருந்தது.

பொவாடையின் வைக்கோல் போர் தீப்பிடித் தால், அதற்காக அவனோ மற்றவர்களோ இங்கே வந்திருக்கமாட்டார்கள். நீதி விசாரணைக்குப் போக வேண்டிய இடம் பட்டாமணியத்தினுடைய வீடு.

ஆனால் தாயுமானவர் உயர்நிலைப் பள்ளி

  • - மு. i- ! ■ ዚበ ffföööዥ6)፤ „ïïï ஒருவன இதில் குற்றவாளியாக்ச்

சம்பந்தப்பட்டிருப்பதால்தான், கூட்டம் திசைமாறித் தன் வீடு நோக்கி வந்திருக்கிறது. இது எவ்வளவு பெரிய தப்பான காரியம்! தனக்கு இத்தனை அவமானம் ஏற்படச் செய்த அந்த மாணவன் யார்? அவனையும் கட்டி இழுத்து வந்திருப்பார்களே,