பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ཟག་ཟླ་ 27

பார்க்கலாம்’ என்று நினைத்த சந்தானம் வேகமாய் வாசலுக்கு வந்தார்.

சந்தானத்தின் தலையைக் கண்டதுமே, எஜமான், என்னோட முந்நூறு ரூபாய்

வைக்கோலுக்கும் அநியாயமாகக் கொள்ளி வைச்சுப் புட்டாங்க எஜமான். பக்கத்திலே கொட்டகையிலே நின்ன கன்னுக்குட்டியோட காலு எல்லாம் கூட வெந்து போச்சு எஜமான். கடைத் தெருச்சண்ட்ை கடைத் தெருவோடு போயிடுச்சு; அதுக்காக் இப்படியா விரோதம் வெச்சுக்கிட்டு, வைக்கல் போருக்குக் கொள்ளி வைக்கிறது? எஜமான்தான் என்று கூறியவன், நெடுஞ் சாண் கிடையாய்ச் சத்தானத்தின் காலில் விழுந்து

நியாயம் வழங்கனும்:

விட்டான்.

சந்தானத்தின் கண்கள் கோவைந் பழமாகச் சிவந்தன. அவருக்குக் கடைத்தெருச் சண்டை யைப் பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது. ஆனாலும், அந்தச் சண்டையின் எதிரொலியாக இந்தத் தீவைப்பு நிகழ்ந்திருக்கிறது. எனவே, அவரது உள் ளத்தில் ஒரு வியப்பு.

வஸ்தாதை எதிர்க்கும் வலிமை மட்டுமல்ல; அவன் வீடு தேடிச் சென்று பழிவாங்கவும் திறமை படைத்த ஒருவன் தம் பள்ளியில் இருக்கிறானாஅந்த மாணவன் யார் என்று அவனை அறிந்து கொள்ள ஓர் ஆவல் பிறந்தது. ஆனாலும் அந்த மாணவன் செய்த காரியம் வீரமென்று மெச்சும் செயலல்லவே!