பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

நம்பி ஏமாந்து விட்டதில் பாவாடைக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியுடனேயே சவுக்குத் தோப் புக்குச் சென்றான் தன்னுடைய கைத்தினவை

எல்லாம்-சந்தைப் பேட்டையில் பலபேருக்கு முன்னால் அவமானப் படுத்திய சங்கரை தையப் புடைப்பது மூலம் தீர்த்துக்கொள்ள அந்த

வீட்டினுள் நுழைந்த பாவாடைக்குத்தான் எவ்வளவு ரமாற்றம்!

பட்டாமணியகாரருடைய சவுக்குத் தோப்பு வீட்டை நெருங்கும் போது அவனுக்கு ஒன்றுமே தெரியவில்லை. ஆனால்- வாசலில் பூட்டிய பூட்டு அப்படியே இருக்க, பக்கத்துச் சுவரிலிருந்த ஜன்னல் கம்பிகள் மட்டும் அவனையே விழுங்கி விடுபவை போல் ஆ’ வென்று வாயைப் பிளந்து கொண்டு நின்றன. உள்ளே அவர்களைக் கட்டிக் கொண்டு போய்ப் போட்ட கோணிப்பைகள் கை கொட்டிச் சிரிப்பது போல் தரையில் பரப்பிக் கிடந்தன.