பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

விடுகிறோம்' என்று செய்தி வந்த பிறகுதான் திட்டப்படிக் கொள்ளி வைப்பு நடந்தது. சங்கரும் அவன் கூட்டாளியும் கோணிப்பைக்குள் கட்டப்பட்டு பட்டாமணியத்தின் சவுக்குத் தோப்பு வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டார்கள். அவர்களை உள்ளே தள்ளிப் பூட்டி விட்டுத்தான் பாவாடை செய்தி சொல்ல எஜமானர் வீட்டுக்கு ஓடோடியும் வந்தான்.

அதைக்கேட்டுப் பட்டாமணியம் மனம் பூரித் தார். காரியத்தை அன்றே அத்தனை சுலபமாக .ெ வ ற் றி க ர ம க முடித்து விட்டதற்காகப் பாவாடையை வாயாரப் புகழ்ந்தார். அதோடு அவர், மேற்கொண்டு நாளைக் காலை என்ன செய்ய வேண்டும்’ என்கிற உத்தரவு ஒன்றும் போட்டார்.

பொழுது விடிவதற்குள், கூட்டாகப் பொய்ச் சாட்சி தயார் செய்து கொண்டு, காலையில் சந்தானத்தின் வீட்டுவாசலில் போய் முறையிட வேண்டும். இதுதான் அந்தத் திட்டம். அந்தக் கைங்கரியத்துக்காகப் பட்டாமணியம் இரண்டு கற்றை நோட்டுகளையும் எடுத்துப் பாவாடையின் கையில் கொடுத்தார்.

அந்தக் கைக்கூலிப் பணம்தான்-சந்தானத்தின் வீட்டு வாசலில் பல பேர்களின் வாக்குமூலமாகப் -பொய்ச்சாட்சியாக முழங்கியது.

அந்தப் போலி நாடகத்தையும்; அதில் தன்னு டைய நடிப்பையும் சந்தானம் உண்மை என்றே