பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

காரியம் இத்தனை சுலபமாக வெற்றியாக நடந்: தேறும் என்று அவன் எண்ணவில்லை.

மேலும்; பட்டாமணியத்திடம் பேசிக் கொண் டிருந்தபடி தனது திட்டத்தை நிறைவேற்ற அன்றே இப்படி ஓர் அருமையான வாய்ப்புக் கிடைக்கும் என்றும் அவன் நினைக்கவேயில்லை.

சங்கர் ஒழுங்காக ஹாஸ்டலுக்கு அன்றிரவு வந்து சேராததுதான் பாவாடையின் தீ ய்வைப்பு நடவடிக்கைக்கு உரமாக அமைந்தது. ஹாஸ்டலில் படுத்துக்கொண்டிருந்தாலும் அவனை ரகசியமாகத் துரக்கிக் கொண்டு வந்து விடவேண்டும் என்று பாவாடை தன் ஆட்களுக்கு உத்தரவிட்டிருந்தான் ஆனால் அவர்களுக்கெல்லாம் அத்தனை சிரமம் கொடுக்காமல் சங்கரே அந்தத் தீயவர்களது திட்டத் துக்கு வழிவகுத்துக் கொடுத்துவிட்டான்.

ஆம்! சங்கரை உக்கடையிலிருந்தே ரகசியமாகக்

கண்காணித்துப் பின் தொடர்ந்து வந்த பாவாடை யின் ஆட்கள்; மதகுக்குப் பின்னாலிருந்து, சங்கரும், குமாரும் பேசிக்கொண்டிருந்ததையெல்லாம் ஒட்டுக் கேட்டார்கள். ஹாஸ்டலுக்கே அன்றிரவு போகாமல் மட்டம் போட்டுவிட்டுத் தெருத் திண்ணையில் தூங்குவது என்கிற முடிவுக்கு அவர்கள் வந்ததும்; பாவாடைக்குச் செய்தி பறந்தது.

பெயல்கள் கைக்குள்ளிருக்கிறானுகள். உடனே போருக்குத் தீ மூட்டிடுங்க, நாங்கள் மதகிலி

ருந்தே இவனுகளைக் கடத்திக் கொண்டுவந்து