பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

நீங்க சோறும் தண்ணியும் போட்டு; தங்க நிழலும் கொடுத்துப் படிப்புச் சொல்லி வைக் கிறீங்க! தின்னுப்புட்டு ஒழுங்கா படிக்காமே; இப்படி ஊர் வம்புக்குத் தினவெடுத்து அலைஞ்சா?’’

அப்படி அலையறவனுக்கு இங்கே இட மில்லை. என் பையன்கள் மேலே தப்பு இருந்தா; நீங்கபட்ட நஷ்டத்துக்கு ரெண்டு பங்குப் பணம் தந்து உங்க கஷ்டத்தைப் போக்கறேன். நீங்க இப்போ அமைதியாப் போயிட்டுச் சாயங்காலமா வாங்க! என்றார் சந்தானம்.

அதற்குமேல் அங்கே வாதாடிக் கொண்டிருக்க யாருக்கும் துணிவில்லை. மேலும்; சந்தானம் விசாரிக்கிறேன்’ என்றுகூறிவிட்டால் அவர் நியாயத் தைத் தான் பார்ப்பார். ஆகவே சங்கருக்குத் தண்டனை தப்பாது; நஷ்டஈடும் கிடைத்துவிடும். என்று பாவாடை உள்பட அனைவரும் எண்ணிக் கொண்டு சென்றார்கள். ஆனால் பாவாடை மட்டும் சங்கரும், அவனது நண்பனும் தான் அடைத்து வைத்த ரூமில் கிடப்பார்கள்; போய் நல்ல செமை அடி கொடுக்க வேண்டும்’ என்று தனக்குள் மனப்பால் குடித்துக் கொண்டு சென்றான்.

எண்ணியபடியே எல்லாம் உலகத்தில் நடந்து விட்டால் அப்புறம் என்ன இருக்கிறது?

கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு பாவாடை ந்ைதானத்தின் வீட்டுக்கு வரும் போது த்ன்னுடைய