பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

பொழுது விடிந்ததும் விடியாததுமாகப் பாவாடை யுடன், பெரும் சண்டை போல் இரைந்து கத்திக் கொண்டிருந்தார் பட்டா மணியம்,

வசந்திக்குத் தந்தையின் இந்தக் கோபத்துக் கான காரணமே புரியவில்லை. ஏனென்றால் இரவு போருக்குத் தீ மூட்டியதாகவும், அந்தப் பழியைச் சங்கர்மீது சுமத்த அவனையும் அவனது கூட்டாளி யையும் ச்வுக்குத் தோப்புப் பங்களாவில் முன்னெச் சரிக்கையாகச் சிறைப் படுத்தி யிருப்பதாகவும் பாவாடை கூறியது கேட்டு அவர் அடைந்த மகிழ்ச் சிக்கு அளவே இல்லை. பாவாடையை அவனுடைய திறமைக்காக வானளாவப் புகழ்ந்தார். இப்போதோ தாறுமாறாகத் திட்டுகிறார்! -

காரணம்; வசந்தி எதிர்பார்த்ததுதான். சங்கர் தோட்டத்து வீட்டிலிருந்து தப்பித்துச் சென்று விட்டானாம்! o

'முட்டாளே! பூட்டு அப்படியே பூட்டியபடி இருக்கு; ஒரு பொடிப்பயல் ஜன்னல் கம்பியை வளைச்சுத் தப்பிப் போய்விட்டான்னு பூதம் மாதிரி ஓர் ஆள் வந்து சொல்றியே, உனக்கு வெட்கமா இல்லை???

  • நான் இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லைங்க எஜமான்!??-பாவாட்ை குழறினான்.
  • நீ எதிர்பார்த்தபடி என்னதான் நடந் திருக்கு? சந்தைப் பேட்டையிலே உன் மானம்