பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. யானையுடன் மோதிய பூனை

-*. --- - -- ---

சந்தைப்பேட்டையின் சந்தடி மிக்க சில கடைத் தெருக்களையெல்லாம் கடந்து நேராக ஆற்றங் கரையின் இடது பக்கம் திரும்பினால் அங்கே ஒரு டூரிங் சினிமாக் கொட்டகை இருக்கும். நாலா பக்கங்களிலிருந்தும் வரும் ரோடுகள் சங்கமம் ஆகும் இடத்தில் அந்த பேபி டாக்கீஸ் இருந்தது.

ஏழுமனிக்குமேல் ஆரம்பமாகிற ஒரு பழைய தமிழ்ப்படத்திற்கு, மாலை ஐந்து மணியிலிருந்தே போவோரையும் வருவோரையும் வருந்தி வருந்தி அழைப்பதுபோல் ரிகார்டு பாடல்கள் முழங்கிக் கொண்டிருக்கும். அன்று ஒரு புதுப்படம் ஆரம்ப மானதால் அளவுக்கு மீறிக் கூட்டம் கூடியிருந்தது.

டுரிங் டாக்கீஸை ஒட்டியுள்ள நாயர் டீக்கடை களைகட்டிவிட்டது. கதவில்லாத அந்த டீக்கடையில் நெரிசல் காரணமாக, கண்ணாடி கிளாசுக்கும் ஸ்பூனுக்கும் கைகலப்பு மும்மரமாகக் கேட்கத் தொடங்கியது.

டீக் கடைக்குப் பக்கத்தில் இருந்த கைப்பிடி மதகில் உட்கார்ந்து ரிகார்டு கேட்டுக் கொண்டிருந்த சங்கரும் அவன் நண்பர்களும் இந்தக் காட்சியை