பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

ஊற்றினாள். அப்போதுதான் அவருக்குச் சிறிது தெம்பு வந்தது. செம்பைத் திரும்பக் கொண்டு போய்க் கொடுத்துவர, சங்கர் குடிசைக்குச் சென்றான். காத்திருந்த கிழவி சங்கரைப் பிடித்துக்

கொண்டாள்.

'நீங்க யாரு, எந்த ஊரு, எப்படி வண்டி குடை

சாஞ்சிச்சு? என்கிற அத்தன்ை கேள்விகளையும்

கேட்டு விட்டாள். சங்கரும் சுருக்கமாகக் கூறினான்.

--

எங்களுக்குச் சந்தைப் பேட்டை. பட்டா மணியம் புதிசா ஒரு மாடு வாங்கியிருக்காரு அதை ரேக்ளா வண்டியிலே கட்டி, பாவாடைதான் அதை ஒட்டிக்கிட்டு வந்தார். மாடு மிரண்டு போய் மரத்திலே மோதிடுச்சு!’’

எந்தப் பாவாடை? வஸ்தாத் பாவாடையா?*

ஆமாம், அவரே தான்! உங்களுக்கு அவரைத் தெரியுமா??? - கிழவி சிறிது யோசனையில் ஆழ்ந்தாள்.

பாவாடையின் பெயரைக் கேட்டதும் கிழவியின் * - து முகம மாறுதலடைநதது.

கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போ அவரு எங்கே???

வழியிலேதான் விழுந்து கிடப்பார். நான் போகனும், வாறேன். தண்ணீர் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி!” என்று கூறி விட்டு வேகமாகச் சாலையை நோக்கி நடந்தான்.