பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

ஓர் அறையில் ஈட்டி, வேல், கம்பு, கத்தி, ஹரிக்கேன் விளக்குகள்: சாராயப் புட்டிகள் எல்லாம்

இருந்தன.

இதைக் கண்டதும் சங்கர் வந்த சுவடு தெரி யாமல் வெளியே வந்தான். அப்போது மொட்டைக் கிணற்றங்கரையில் நின்றுகொண்டிருந்த ஒரு கிழவி அவனைப் பார்த்துவிட்டாள்.

  • யாரப்பா நீ? எங்கே போயிட்டுப் போறே???

என்று ஒர் அதட்டல் போட்டாள்.

அந்தக் கிழவியை ஒரு முறை நோட்டம் விட்ட படியே அருகில் வந்த சங்கர், ஒண்ணுமில்லே பாட்டி; கொஞ்ச தூரத்திலே நாங்க ஏறி வந்த வண்டி குடை சாஞ்சு போச்சு அதிலே வந்த ஒருத்தருக்குக் கொஞ்சம் குடிக்கத் தண்ணி வேணும். அதுதான் அவசரமா ஓடி. வந்தேன்.’’ என்று கூறினான்.

இவ்வளவுதானே, இந்தா, தண்ணி, கொண்டு போய்க் கொடு. என்று ஒரு செம்பு நிறைய நீரை மொண்டு அவனிடம் நீட்டினாள் கிழவி. நன்றி யுடன் அதைப் பெற்றுக்கொண்ட சங்கர், இப் பவேயே செம்பைத் திருப்பிக் கொண்டு வரேன் பாட்டி!?? என்று தண்ணிருடன் ஒட்டம் பிடித்தான்.

சங்கர் கொண்டு வந்த தண்ணிரை வாங்கி வசந்தி தந்தையின் வாயில் சிறிது சிறிதாக

ஜே.-5