பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

சிராய்ப்பு ஏற்பட்டிருததது. மேல் தோல் வழுக்கி, ரத்தச் சிவப்பாயிருந்தது. சங்கருக்குத் தலையில் அடி. அதனால்தான் சிறிது நேரம் அப்படி யே விழுந்து கிடந்தான்.

சற்றுச் சுயநினைவு திரும்பியவுடன் பட்டா மணியம் அருகில் அவன் ஒடிச் சென்றான். அவர் அவனை மெள்ளத் தடவியபடியே, "உனக்கு ஒன்று மில்லையே??? என்றார். சங்கர் வருத்தத்துடன் தலையை அசைத்தான்.

"வசந்தி எங்கே?' என்று கேட்கவும்தான் அவள் ஞாபகம் வந்தவனைப்போல் சங்கர் ஓடினான். சாலையை அடுத்த வயலில் விழுந்து கிடந்த அவளை மெள்ளப் பட்டாமணியத்தினிடம் அழைத்துக் கொண்டு வந்தான்.

தண்ணிர் வேண்டும்.....?? என்று லேசாகக் கையைத் துாக்கிச் சமிக்ஞை செய்தார் பட்டா மணியம். வயதின் முதிர்ச்சியினாலும், விபத்தின் அதிர்ச்சியினாலும் அவர் பெரிதும் பாதிக்கப் பட்டிருந்தார்.

சங்கர் சுற்றுமுற்றும் பார்த்தான். துரத்தில் வயல் வெளிக்கு மத்தியில் ஒரு குடிசை கண்ணுக்குத்

தெரிந்தது. "இதோ ஒரு நொடியில் வருகிறேன்!-- என்ற சங்கர் குடிசையை நோக்கி ஓடினான்.

குடிசைக்குள் நுழைந்த சர்கர் ஒரு கணம் திடுக்கிட்டுப் போனான். அந்தமண் குடிசையிலுள்ள