பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

நேரே டவனுக்கு - சர்க்கார் ஆஸ்பத்திரிக்கு ஒட்டு: என்று பொன்னுசாமி உத்தரவு பிறப்பித் தார். சலங்கை பூட்டிய அந்த இரட்டை மாட்டு வண்டி ஜல்ஜல்’ என்று ஓடத் தொடங்கியது.

வண்டி சிறிது துரம் ஓடி, ஒரு வளைவு திரும்பியபோது திடீரென்று பட்டாமணியம், பொன்னுசாமி வண்டியைக் கொஞ்சம் நிறுத்தச் சொல்லு!’ என்றார்.

சாலையில் ஒரமாக-ஒரு மரத்தடியிலிருந்து முனகல் குரல் வந்தது. பாவாடைதான் அங்கே ஐயோ, அம்மா." என்று அரற்றியபடி விழுந்து கிடந்தான். o

கீழே விழுந்ததில், சாலையிலிருந்த ஒரு குத்துக் கல்லில் அடிபட்டு அவனுடைய தலையிலிருந்து இரத்தம் ஒழுகிக்கொண்டிருந்தது.

நான்தான் சொன்னேனே பொன்னுசாமி, பாவாடைதான் ரேக்ளாவை ஒட்டிக்கிட்டு வந்தான். இந்த முரட்டுக் காளை அவனையும் உதறிக் கீழே தள்ளிப்பிட்டுத்தான் இந்தப் பாடு படுத்தியிருக்கு’’ என்றார் பட்டாமணியம்.

பாவம், அவருக்கு விஷயம் ஒன்றுமே தெரியாது. பாவாடையிடம் அவருக்கு அளவுக்கு மீறியதொரு இரக்கமே மேலோங்கியிருந்தது.

கீழே இறங்க முயன்ற பட்டாமணியத்தைப் பொன்னுசாமி கண்டித்தார்.