பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

  • நீ சும்மா அப்படியே உட்கார்ந்திரு. எல்லாம் நான் பார்த்துக்கறேன்!?? என்று கீழே இறங்கிய அவர், பாவாடை அருகில் சென்று பார்த்தார். கூடவே சங்கரும் சென்றான்.

சங்கரைக் கண்டதும் பாவாடை பற்களை வெளியே தெரியாமல் நறநறவென்று கடித்துக் கொண்டான். சங்கருக்கு உண்மையிலேயே மனத் துக்கு மிகவும் கஷ்டமாகப் போய்விட்டது. தலையில் இவ்வளவு பெரிய காயம்பட்டு எழுந்திருக்க முடி யாமல் பாவாடை கிடப்பான் என்று அவன் எதிர் பார்க்கவில்லை.

ஆழமாகப் பட்டிருந்த காயத்திலிருந்து ரத்தம் கசிவதை நிறுத்தப் பட்டாமணியத்தின் துண்டை

வாங்கிப் பாவாடையின் தலையில் இறுகக் கட்டினார் பொன்னுசாமி.

பொன்னுசாமி, என்னைக் கொண்டுபோய் விட்டிலே விட்டுடு. என்விஷயம் நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம். பாவாடையை அவசரமா நீ அழைச்சுக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போ!' என்றார் பட்டாமணியம்.

உடனே பாவாடை, அதெல்லாம் ஒண்னும் வேண்டாமுங்க. அடிபட்ட வேகத்திலே, தலை சுத்திக் கொஞ்சம் மயக்கம் போட்டுக் கிடந்திட் டேன். அவ்வளவுதான். இதுக்காக ஆஸ்பத் திரிக்குப் போறதாவது? பேசாமே வீட்டுக்குப்போய் ஒரு பச்சிலையை அரைச்சுக் கட்டினாக் கழுதை