பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

சரியாப் போகுது. நீங்க கவலைப்படாமெ போங்க, எஜமான்!” என்றான் சற்றுத்தெம்புடன்.

எனவே பொன்னுசாமியின் வண்டி மற்றவர் களுடன் டவுன் ஆஸ்பத்திரியை .ே ந க் கி. விரைந்தது.

வண்டி கண் மறைந்ததும் பாவாடை மெள்ள எழுந்து வயல் மத்தியிலிருந்த கிழவியின் குடிசையை நோக்கி நடந்தான்.

ஆஸ்பத்திரியில் பட்டாமணியத்தைப் பரிசோ தித்த டாக்டர். 'காலில் உள் எலும்பு முறிவு ஏதாவது ஏற்பட்டிருக்கலாம். அதனால் எதற்கும் காலையில் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துத்தான் முடிவு கூற முடியும்’ என்றார். பட்டாமணியத்துக்கு, பெட்’ ஏற்பாடு செய்து ஆஸ்பத்திரியிலேயே படுக்க வைத்தார்கள்.

மறுநாள் வந்து பார்ப்பதாக பொன்னுசாமி பட்டாமணியத்திடம் சொல்லி விடை பெற்றுக் கொண்டு வசந்தியையும் சங்கரையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு சந்தைப்பேட்டைக்கு வந்தார்.

நடந்த விவரங்களை யெல்லாம் கேட்டு முனியன் பதறிப்போனான். வசந்தியை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்படி முனியனுக்கு உத்தரவு பிறப்பித்துவிட்டுப் பொன்னுசாமி போனார்.

'அப்பா ஆஸ்பத்திரியில் என்ன அவதிப்படு கிறாரோ’’ என்று வசந்தி அடிக்கொருதரம் கூறிக் கொண்டே இருந்தாள்.