பக்கம்:ஜேம்ஸ் பாண்ட் சங்கர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

அப்போது முனியன் சட்டென்று, “ஏன் சங்கர் சாரு நீ இனிமே பாடசால்ைக்குப் போவானேன்? இங்கேயே தங்கிப்பிடேன். பாப்பாவுக்கு மனசுக்குக் கொஞ்சம் தெம்பாயிருக்கும்: என்றான்.

உடனே வசந்தியும் ஆமாம் சங்கர், நீ இன் றைக்கு ஹாஸ்டலுக்குப் போகவேண்டாம்!” என்று சிறு குழந்தைபோல் சிணுங்கினாள்.

"ஐயோ, போகவேண்டாமா? மானேஜர் அப் புறம் என்ன செய்வாருன்னு உங்களுக் கெல்லாம் தெரியாது’ என்றான் சங்கர் படபடப்பாக. உடனே முனியன், "ஒண்னும் செய்யமாட்டாரு பாரேன். நான் இப்பவே சந்தானத்தையா கிட்டே போய் விஷயத்தை விளக்கிப் பிடறேன். அப்புறம் உனக் கென்ன பயம்?” என்று கூறிவிட்டுப் பதிலுக்குக் காத் திராமல் வெளியேறினான். i.

வசந்தியும் சங்கரும் அதற்குமேல் என்னசெய்வ தென்று புரியாமல் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டர்கள். அப்போது வசந்தி தன்னையும் மீறி ஐயோ சங்கர், உன்னுடைய டாலர் எங்கே??? என்று அலறினாள்.

தேள் கொட்டினாற்போல், சட்டென்று கையால் நெஞ்சைத் தொட்டபடி சங்கர் குனிந்து பார்த் தான். டாலர் தொங்கிய இடத்தில் ஒரு கிழிசல்தான் சட்டையில் இருந்தது.