பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 ஞானசம்பந்தர் என்ற முதற்பாடலில் மிழலையை நினைய வல்லவர் என வரும் இறுதித் தொடரை அலர்மகள் மலிதர அவனி வில் திகழ்பவர் என முதலடியுடன் இயைத்து நோக்கிப் பொருன் கொள்ளல் வேண்டும். மேலும், பிள்ளையார் சீகாழியில் தங்கியிருக்கும்போது புகலியின்மீது முன்னியகலை (2. 29) என்ற பதிகமும், அண்பையின் மீது எக்தமது (3, 75) என்ற பதிகமும் தோணி புரத்தின்மீது சங்கமரு (3.81) என்ற பதிகமும், புறவம் மீது பெண்ணியலுரு (3, 84) என்ற பதிகமும் பாடியதாகக் குறிப்பிடுவர் சேக்கிழார் பெருமான். இவற்றை, செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்க ளான்மொழி மாற்றும் வந்தசொத் சீர்மாலை மாற்றும் வழிமொழி எல்லா மடக்குச் சக்தவி யமகம் ஏகபாதம் தமிழ்இ ருக்குறள் சாத்தி எங்தைக் கெழுகூற் றிருக்கை ஈரடி பாடி வைப்பு காலடி மேல்வைப்பு மேன்மை கடையின் முதுகுடுமி ராகம் சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக மூல இலக்கிய மாக எல்லாப் பொருகளும் முற்ற சூாலத் துயர்காழி யாரைப் பாடினார் ஞானசம்பந்தர். * என்ற பாடல்களால் தெரிவிப்பர். இத்திருப் பதிகங்களை யெல்லாம் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் அவர் துணைவி மதங்க சூளாமணியாரும் யாழிட்டுப் பாடிப் போற்றிய தாகவும் குறிப்பிடுவர். 14. பெ. பு: ஞானசம்பந்-276, 277.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/117&oldid=855957" இலிருந்து மீள்விக்கப்பட்டது