பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழுமல நிகழ்ச்சிகள் ?畿 யாவும் ஏனைய மூன்றடிகளிலும் மறைந்துள்ளன எனக் கருதற்கு இடம் இல்லை. ஆகவே தேவாரத்தில் அமைந்த கூடற்சதுக்கம் என்ற மிறைக் கவியும் பிற்காலத்தார் வழங்கும் கூடசதுக்கம் என்ற சித்திர கவியும் தம்முள் வேறெனவே கொள்ளற்பாலது. நான்கு தெருக்கள் ஒன்றாகச் சந்திக்கும் இடத்தைச் :சதுக்கம் என வழங்குதல் மரபு. இம்முறையில் திருமயேந் திரம், திருக்கயிலாயம், திருவாரூர், திருவானைக்கா என்னும் நான்கு தலங்களும் ஒன்று கூடிய நிலையில் இந்நான்கு தலங்களிலும் கோயில் கொண்டருளிய பெருமானைப் பரவிப் போற்றுவதாக அமைந்தது, மண்ணது வுண்டரி மலரோன்கானா வெண்ணா வல்விரும்பு மயேந்திரரும் கண்ணது வோங்கிய கயிலையாரும் - அண்ணலள ரூராதி யானைக்காவே. (1) என்ற பாடலை முதலாகவுடைய திருப்பதிகமாகும். இப் பதிகப் பாடல்கள் யாவும் மேற்குறிப்பிட்ட நான்கு தலங் களையும் குறித்துப் போற்றுமுகத்தால் அவை நான்கும் ஒருங்கே கூடிய சதுக்கம் போன்று அமைந்துள்ளதால் இப்பதிகம் கூடற் சதுக்கம் என்ற பெயர் பெறுகின்றது. பூட்டுவிற் பொருள்கோள்: செய்யுளின் முதலிலும் இறுதியிலும் நிற்கும் மொழிகள் தம்முள் பொருள் நோக்க முடையனவாய் இயைந்து நிற்கும் நிலையினைப் பூட்டுவிற் பொருள்கோள் என்பர். அலர் மகள் மலிதா (1. 124) என்ற முதற்குறிப்பினையுடைய திருப்பதிகத்தின் முதற் பத்துப் பாடல்களும் பூட்டுவிற் பொருள்கோளில் அமைந் திருப்பவை. அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர் மலர்மலி குழலுமை தனையிட மகிழ்பவர் கலமலி புருவுடை யவர்நகர் மிகுபுகழ் நிலமலி மிழலையை கினையவ லவரே (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/116&oldid=855956" இலிருந்து மீள்விக்கப்பட்டது