பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7t) ஞானசம்பந்தர் பாடலமைப்பு இப்பதிகத்தில் இருப்பதாகப் புலப்படவில்லை. இப்பதிகத்திற்குப் பிள்ளைார் இட்ட பெயர் கோமூத்திரி என்பதன்று: வழி முடக்குமாவின் பாய்ச்சல் என்பதே இப் பதிகத்தின் பெயராகும். இதன் பெயர்க் காரணம் நன்கு புலனாகவில்லை. இப்பதிகத்திலுள்ள பாடல் ஒவ்வொன் றிலும் பிரமபுரத்திற்குரிய பன்னிரு திருப்பெயர்களும் எண்ணப்பெந்துள்ளன. ஒரு பாடலின் இறுதியில் வைத் தெண்ணப்படும்பெயர் அடுத்த பாடலின் முதலாக மீண்டும் கடித் தெண்ணப் பெறும் நிலையில் அமைந்த இப்பதிகம். முடக்காக வளைந்த வழியிலே சென்ற மாவானது மீண்டும் வந்த வழியே மடங்கிச் சென்றாற் போலும் நடை அமைப்பினை புடையதாதல் ஈண்டு நோக்கத் தக்கது. கூடத்சதுக்கம்: இது கூடசதுக்கம் என்றும் குறிப்பிடப் பெதும். கண்ணது வுண்டரி (3, 109) என்ற முதற்குறிப் புடைய பதிகம் இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிக்கப் பெற்றுள்ளது. ஒரு செய்யுளின் நான்காம் அடியிலுள்ள எழுத்துகள் யாவும் ஏனைய மூன்றடிளுேள்ளும் மறைந்து, திற்குமாறு பாடப்பெறுவது கூடசதுக்கம். கூடம்மறைவு. சதுக்கம் நான்காவது; மறைவான நான்காமடி புடையது. எனவே, நான்காமடியிலுள்ள எழுத்துகள் எல்லாம் மற்றைய முதல் மூன்றடிகளுள்ளும் நிற்றல் கூடசதுக்கம்" என்ற சித்திர கவியின் அமைப்பாதல் பெறப்படும். . பிள்ளையார் அருளிய மண்னது வுண்டரி என்னும் பதிகப் பாடல்களின் நான்காம் அடிகளில் முன்னை மூன்றடிகளிலும் இல்லாத எழுத்துகள் சில இருத்தலால், இப்பாடல்களின் நான்காம் அடியிலுள்ள எழுத்துகள் 12. திருக்கடைக்காப்புத் திருப்பாடலால் இது தெளி வாகும். 13. தண்டி.சொல்லணி.சித்திர கவி.2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/115&oldid=855955" இலிருந்து மீள்விக்கப்பட்டது