பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழுமலை நிகழ்ச்சிகள் 69 சக்கரம் சீர்த்தமிழ் விரகன்தான் சொன்ன தமிழ் தரிப்போர் தவம் செய்தாரே என வரும் திருக்கடைக் காப்பின் ஈற்றடியால் இனிது தெளிவாகும். பிற்காலத்தார் இதனைச் சக்கரமாற்று எனக் குறித்தனர்.19 கோமூத்திரி : கோமூத்திரியாவது , ஒரு செய்யுளின் முன்னிரண்டடிகளை மேல்வரியாகவும், பின்னிரண்டடி களைக் கீழ்வரியாகவும் வரைந்து அவ்விரண்டு வரிகளின் எழுத்துகளை மேலும் கீழுமாக ஒன்றிடையிட்டுப் படித் தாலும் அதே செய்யுளால் அமையும் சித்திர கவியாகும். இதன்கண் மேலும் கீழும் உள்ள அடிகளில் அமைந்த எழுத்துகள் கோமூத்திரி ரேகைபோல் ஒன்றிடையிட்டுப் படிக்கப் பெறுதலின் கோமூத்திரி எனப்பட்டது. பூமகனூர்' {2.74) என்னும் முதற் குறிப்புடைய பிரமபுரத் திருப் பதிகம் கோமூத்திரி என்ற சித்திர கவியாகக் குறிக்கப் பெற்றுள்ளது. கோமூத்திரி எனப் பிற்காலத்தார் கூறும் 10. பிற்கால யாப்பணி நூலார் கூறும் சக்கர பந்தத்தின்" அமைப்பும் சம்பந்தரின் சக்கர மாற்றின் அமைப்பும் தம்முள் வேறுபட்டவை. சக்கர பந்தம்’ சேக்கர மாற்று என வழங்கும் பெயர் வேறுபாட்டாலேயே நன்கு புலனாகும். அன்றியும், தேவாரத் திருப்பதிகங்களில் அமைந்த சக்கர மாற்று ஒரு பதிகமாய் அப்பதிகம் முழுவதும் ஒரு வட்டமாய் அமைந்தது; யாவர்க்கும் பொருள் இனிது விளங்க இயல்பு வகையாற் பாடப் பெறுவது. பிற்காலத்தார் கூறும் சக்கர பந்தம் ஒரு பாடலாப் வட்டங்கீறி ஆரைகளில் எழுத்துகளை அமைத்துக் காட்டும் நிலையில் அமைந்தது: எழுதி தெண்ணிச் செயற்கை வகையால் பாடப் பெறுவது; பொருள் தெளிவில்லாதது. தண்டியலங்காரத்திலுள்ள நான்காரைச் சக்கரம், ஆறாரைச் சக்கரம், எட்டாரைச் சக்கரம் காண்க (தண்டி - சொல்லணி 9). 11. தண்டி . சொல்லணி, சித்திர கவி - 1 காண்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/114&oldid=855954" இலிருந்து மீள்விக்கப்பட்டது